Advertisement


இங்கிலாந்து ‘சூப்பர்’ வெற்றி * பேர்ஸ்டோவ் சதம்

மே 15, 2019 21:27
 Comments  
 


Bairstow century sees England overpower Pakistan
 

 பிரிஸ்டல்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் சதம் அடித்து அசத்தினார். 

இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டி முடிவில் இங்கிலாந்து (1–0) முன்னிலையில் இருந்தது. மூன்றாவது போட்டி பிரிஸ்டலில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் பீல்டிங் தேர்வு செய்தார். 

இமாம் ஆறுதல்

பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான் (2), பாபர் (15) ஏமாற்றம் தந்தனர். ஹரிஸ் சோகைல் 41 ரன் எடுக்க, கேப்டன் சர்பராஸ் அகமது (27) கைவிட்டார். இமால் உல் ஹக் ஒருநாள் அரங்கில் 6 வது சதம் அடித்தார். ஆசிப் அலி (52) அரைசதம் அடித்து அவுட்டாக, இமால் உல் ஹக் 151 ரன்னுக்கு வீழ்ந்தார்.

பின் வரிசையில் இமாத் வாசிம் (22), பகீம் அஷ்ரப் (13) ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது, ஹசன் அலி (18) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்தின் வோக்ஸ் 4 விக்கெட் சாய்த்தார்.

பேர்ஸ்டோவ் விளாசல்

கடின இலக்கைத் துரத்திய இங்கிலாந்து அணிக்கு பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 17.3 ஓவரில் 159 ரன்கள் சேர்த்த போது, 76 ரன்கள் எடுத்த ஜேசன் ராய் அவுட்டானார். பேர்ஸ்டோவ் 128 ரன்கள் எடுத்தார். 

ஜோ ரூட் (43), ஸ்டோக்ஸ் (37) சற்று உதவினர். பின் வரிசையில் மொயீன் அலி (46), மார்கன் (17) அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இங்கிலாந்து அணி 44.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 359 ரன்கள் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 2–0 என முன்னிலை பெற்றது. 

 

மார்கன் ‘சஸ்பெண்ட்’

பிரிஸ்டல் ஒருநாள் போட்டியில் குறித்த நேரத்துக்குள் 2 ஓவர்கள் தாமதமாக பந்து வீசிய இங்கிலாந்து அணி கேப்டன் மார்கனுக்கு போட்டி சம்பளத்தில் 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த பிப்., 22ல் விண்டீஸ் அணிக்கு எதிராக இதுபோல தாமதம் செய்தார். 12 மாத இடைவெளியில் இரு முறை தவறு செய்ததால் கேப்டன் மார்கன், வரும் நான்காவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியின் மற்ற வீரர்களுக்கு தலா 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டன.

இதேபோல 29 வது ஓவரில் அவுட்டான விரக்தியில் பேர்ஸ்டோவ், ஸ்டம்புகளை பேட் வைத்து தகர்த்தார். தவறை ஒப்புக் கொண்ட இவருக்கு தண்டனை தரப்படவில்லை. மாறாக ஒரு அபராத புள்ளி வழங்கப்பட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?