Advertisement


பாண்ட்யா போல வருமா * சேவக் ஆதரவு

மே 15, 2019 21:25
 Comments  
 


No one close to Hardik pandya talent in the team, says Sehwag
 

புதுடில்லி: ‘‘ஹர்திக் பாண்ட்யாவின் ‘ஆல் ரவுண்ட்ர்’ திறமை, தற்போதுள்ள இந்திய அணி வீரர்களுடன் சிறிது கூட ஒத்துப் போகாது,’’ என சேவக் தெரிவித்தார்.

இந்திய அணியின் ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா, 25. உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்திய பிரிமியர் தொடரில் 15 இன்னிங்சில் 402 ரன்கள் குவித்த இவர், பவுலிங்கில் 14 விக்கெட் கைப்பற்றி, மும்பை அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

இவர் குறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் சேவக் கூறியது:

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு பிரிவிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர் ஹர்திக் பாண்ட்யா. தற்போதுள்ள இந்திய ‘ஆல் ரவுண்டர்களில்’ இவருக்கு அருகில் கூட யாரும் வர முடியாது.

ஒருவேளை அப்படி யாரும் இருந்திருந்தால் பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என மூன்று பிரிவிலும் அசத்தக் கூடிய வீரரை இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வு செய்திருக்கும். பாண்ட்யா மீண்டும் அணிக்கு திரும்பி இருக்க முடியாது.

இவ்வாறு சேவக் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?