Advertisement


விண்டீசை வீழ்த்தியது வங்கம்

மே 14, 2019 22:29
 Comments  
 


Mushfiqur Rahim, bangladesh, windies
 

டப்ளின்: விண்டீஸ் அணிக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில் அசத்திய வங்கதேச அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் பைனலுக்கு முன்னேறின.

அயர்லாந்து மண்ணில் விண்டீஸ், வங்கதேசம், அயர்லாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் நடக்கிறது. டப்ளினில் நடந்த ஐந்தாவது லீக் போட்டியில் விண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற விண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

ஹோப் விளாசல்

விண்டீஸ் அணிக்கு சுனில் அம்ப்ரிஸ் (23), டேரன் பிராவோ (6) ஏமாற்றினர். இதன்பின், முஸ்டபிஜுர் ரஹ்மான் ‘வேகத்தில்’ மிரட்டினார். இவரது பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் (19), கார்டர் (3) அவுட்டாகினர். பொறுப்புடன் விளையாடிய ஷாய் ஹோப் (87), கேப்டன் ஹோல்டர் (62) அரை சதம் கடந்தனர். முடிவில், விண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக முஸ்டபிஜுர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

முஷ்பிகுர் அரை சதம்

வங்கதேச அணிக்கு தமிம் இக்பால் (21), சாகிப் அல் ஹசன் (29) சொதப்பினர். சவுமியா சர்கார் (54), முஷ்பிகுர் ரஹிம் (63) அரை சதம் விளாச வெற்றி எளிதானது. ஹோல்டர் பந்தில் மிதுன் (43) ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 47.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மகமுதுல்லா (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதுவரை நடந்த ஐந்து லீக் போட்டியில் தலா 2 வெற்றியுடன், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடம் பிடித்த வங்கதேசம் (10 புள்ளி), வெஸ்ட் இண்டீஸ் (9) அணிகள் பைனலுக்கு (மே 17, டப்ளின்) முன்னேறின. அயர்லாந்து அணி சொந்த மண்ணில் ஏமாற்றியது. இன்று நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் வங்கதேசம்– அயர்லாந்து அணிகள் மோதவுள்ளன.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?