Advertisement


‘உலகை’ வெல்ல இந்தியா ‘ரெடி’ * பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை

மே 14, 2019 22:22
 Comments [1]  
 


India have enough ammunition going into World Cup, Ravi Shastri, kohli
 

புதுடில்லி: ‘‘உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மற்ற அணிகளுக்கு சவால் கொடுக்கும் வகையில் பலத்துடன் உள்ளது,’’ என, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார்.

இங்கிலாந்தின் லண்டனில் வரும் 30ம் தேதி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. வரும் 22ம் தேதி இந்திய வீரர்கள் இங்கிலாந்து கிளம்பிச் செல்கின்றனர். கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் ஜூன் 5ம் தேதி (சவுத்தாம்டன்) தென் ஆப்ரிக்காவை சந்திக்கவுள்ளது.

இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியது:

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும் வகையில் உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது எதிரணிக்கு சவால் கொடுக்கும் வகையில் இந்திய அணி வலுவாக உள்ளது.

‘நான்கு’ சிக்கலா

பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் களமிறங்க போதுமான வீரர்கள் உள்ளதால், கவலைப்படத் தேவையில்லை. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து பிரிவுகளிலும் இந்திய அணி சம பலத்துடன் உள்ளது என நினைக்கிறேன். தற்போதைக்கு இங்கிலாந்து செல்லவுள்ள 15 வீரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விளையாட தயாராக உள்ளனர்.

ஒருவேளை வேகப்பந்து வீச்சாளருக்கு பெரியளவில் காயம் ஏற்பட்டாலும் உடனடியாக மாற்று வீரர் தயாராகவே உள்ளார். பிரிமியர் தொடரில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படாதது குறித்து வருத்தப்படத் தேவையில்லை.

ஜாதவ் அதிர்ஷ்டம்

கேதர் ஜாதவை பொறுத்தவரையில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்பதால் அதிர்ஷ்டக்காரர் தான். இவரது காயம் குணமடைய போதிய கால அவகாசம் உள்ளது. எனினும் வரும் 22ம் தேதி இந்திய அணி கிளம்பிச் செல்லும் போது, 15 பேர் கொண்ட படையில் யார் யார் இருப்பர் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

விண்டீஸ் பலம்

உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு விண்டீஸ், ஆஸ்திரேலியா சவாலாக இருக்கும். இந்தியா வந்த போது விண்டீசை நாம் வீழ்த்தி இருக்கலாம். அப்போதைய அணியில் கெய்ல், ரசல் இல்லாமல் இருந்த போதும், சிறப்பாக திறமை வெளிப்படுத்தினர். தொடர் கடுமையாக இருந்தது. இப்போதுள்ள அணி இன்னும் சிறப்பாக உள்ளது.

அதேபோல நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, கடந்த 25 ஆண்டுகளில் மற்ற அணிகளை விட அதிகமுறை உலக கோப்பை வென்றுள்ளது. இந்த அணி எப்போதும் பலவீனமாக இருந்தது இல்லை. தற்போது அனைத்து வீரர்களும் அணிக்கு திரும்பி, சிறப்பான ‘பார்மில்’ உள்ளது கூடுதல் பலம்.இவ்வாறு ரவி சாஸ்திரி கூறினார்.

 

9 போட்டிகள்

உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் விவரம்:

தேதி எதிரணி இடம்

ஜூன் 5 தென் ஆப்ரிக்கா சவுத்தாம்ப்டன்

ஜூன் 9 ஆஸ்திரேலியா லண்டன்

ஜூன் 13 நியூசிலாந்து நாட்டிங்காம்

ஜூன் 16 பாகிஸ்தான் மான்செஸ்டர்

ஜூன் 22 ஆப்கானிஸ்தான் சவுத்தாம்ப்டன்

ஜூன் 27 விண்டீஸ் மான்செஸ்டர்

ஜூன் 30 இங்கிலாந்து பர்மிங்காம்

ஜூலை 2 வங்கதேசம் பர்மிங்காம்

ஜூலை 6 இலங்கை லீட்ஸ்

* போட்டிகள் இந்திய நேரப்படி மதியம் 3:00 மணிக்கு துவங்கும்.

 

பயிற்சியில்...

உலக கோப்பை தொடருக்கு தயாராக இந்திய அணி இரண்டு பயிற்சி போட்டியில் பங்கேற்கிறது. வரும் 25ம் தேதி இந்திய அணி, நியூசிலாந்தை (லண்டன்) சந்திக்கிறது. 28ம் தேதி நடக்கும் 2வது பயிற்சியில் இந்தியா, வங்கதேச அணிகள் (கார்டிப்) மோதுகின்றன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Shankar Mani 2 weeks ago | Report abuse
இந்தியாவின் உலக கோப்பை கனவு, ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராக இருக்கும் வரை நிறைவேறாது.
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?