Advertisement


சென்னை– தாகா பலப்பரீட்சை

மே 14, 2019 21:59
 Comments  
 


AFC Football, india, chennaiyin fc, dhaka
 

தாகா: ஆசிய கிளப் கால்பந்து தொடரில் இன்று சென்னை, வங்கதேசத்தின் தாகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசிய கிளப் கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் 2018 ஐ.எஸ்.எல்., சாம்பியன் சென்னை, ‘ஐ–லீக்’ சாம்பியன் மினர்வா பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி, மண்டலங்களுக்கு இடையிலான அரையிறுதி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறலாம். முதல் சுற்று முடிவில் சென்னை அணி 3 போட்டியில் 2 வெற்றி, 1 ‘டிரா’ செய்து 7 புள்ளியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது சுற்று போட்டிகள் இன்று துவங்குகின்றன. சென்னை அணி, இன்று தனது நான்காவது போட்டியில் வங்கதேசத்தின் தாகா அபானி அணியை, அதன் சொந்தமண்ணில் சந்திக்கிறது. இதற்கு முன் இரு அணிகள் மோதிய போட்டியில் சென்னை அணி 1–0 என வெற்றி பெற்றிருந்தது. சென்னை அணிக்கு மெய்ல்சன், அனிருத் தபா உள்ளிட்ட வீரர்கள் கைகொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடக்கும் மற்றொரு போட்டியில் மினர்வா பஞ்சாப், நேபாளத்தின் மனாங் அணியை அதன் சொந்தமண்ணில் எதிர்கொள்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?