Advertisement


ராசியில்லாத ‘பர்பிள் கேப்’

மே 13, 2019 21:36
 Comments  
 


ipl purple cap winners, team lose ipl cup
 

ஐதராபாத்: பிரிமியர் தொடரில் ‘பர்பிள் கேப்’ (ஊதா தொப்பி) பெறும் வீரர் சார்ந்திருக்கும் அணிகள் சாம்பியன் கோப்பை வெல்வது என்பது குதிரைக் கொம்பாகி உள்ளது. நான்கு முறை சென்னை வீரர்கள் இவ்விருது பெற்ற ஆண்டில், கோப்பை கைநழுவியுள்ளது.

பிரிமியர் தொடரில் சிறப்பாக செயல்படும் பவுலர்களுக்கு ‘பர்பிள் கேப்’ விருது வழங்கப்படுகிறது. 2008ல் சோகைல் தன்வீர் (ராஜஸ்தான்), 2009ல் பிரக்யான் ஓஜா (டெக்கான்), 2016ல் புவனேஷ்வர் (ஐதராபாத்) இவ்விருது வென்றனர். அப்போது அந்த அணிகள் சாம்பியன் ஆகின. 

மற்றபடி ‘பர்பிள் கேப்’ பெற்ற வீரர் சார்ந்த அணிக்கு சாம்பியன் கோப்பை மட்டும் கை நழுவி விடுகிறது. 2010, பிரக்யான் ஓஜா (டில்லி), 2011, மலிங்கா (மும்பை), 2012, மார்னே மார்கல் (டில்லி), 2017, புவனேஷ்வர் (ஐதராபாத்), 2018, ஆன்ட்ரூ டை (பஞ்சாப்) வென்ற போது இப்படி நடந்தன. 

சென்னை அணியை பொறுத்தவரையில் பிராவோ (2013, 2015), மோகித் சர்மா (2014) மற்றும் தற்போது இம்ரான் தாகிர் (2019) என ‘பர்பிள் கேப்’ வென்ற நான்கு முறையும் கோப்பை வெல்ல முடியாதது சோகம் தான்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?