Advertisement


சென்னை பயிற்சியாளர் ஒப்பந்தம் நீட்டிப்பு

மே 11, 2019 22:16
 Comments  
 


John Gregory extends Chennaiyin FC stay to 2020
 

சென்னை: சென்னை ஐ.எஸ்.எல்., கால்பந்து அணியின் தலைமைப்பயிற்சியாளர் கிரிகோரியின் ஒப்பந்த காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கால்பந்து தொடர் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.எஸ்.எல்.,). இதில் இரண்டு முறை (2015, 2017–18) கோப்பை வென்ற அணி சென்னை. கடந்த 2017ல் சென்னை அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமிக்கப்பட்டார். தனது சிறப்பான பயிற்சியின் மூலம், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று காட்டினார். ஆசிய கோப்பைக்கு ஐ.எஸ்.எல்., தொடரிலிருந்து முன்னேறிய முதல் அணி என்ற பெருமை பெற்றுத்தந்தார். கடந்த சீசனில் சென்னை அணி கடைசி இடம் பிடித்தது. இருப்பினும், கிரிகோரியின் ஒப்பந்த காலம் 2019–20 சீசன் வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிரிகோரி கூறுகையில்,‘‘ சென்னை அணியுடனான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. 2017–18 சீசனில் கோப்பை வென்று தந்தபோதும், கடந்த முறை ஏமாற்றமே கிடைத்தது. எண்ணற்ற அனுபவத்தை இத்தொடர் அளித்துள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய எனக்கு பரிசாக அமைந்துள்ளது,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?