Advertisement


அம்பயர் தவறு சரியா

மே 05, 2019 17:57
 Comments  
 


ab de villiers, cricket, india, umpire
 

‘‘பிரிமியர் கிரிக்கெட் தொடரில் அம்பயர்களின் தவறான தீர்ப்பை பெரிதுபடுத்த வேண்டாம். இது மனித தவறு என்பதை நாம் ஏற்க வேண்டும்,’’ என, பெங்களூரு வீரர் டிவிலியர்ஸ் தெரிவித்தார்.

உலக கிரிக்கெட் அரங்கில் தென் ஆப்ரிக்க வீரர் டிவிலியர்சுக்கு தனி இடம் உண்டு. ‘மிஸ்டர் 360 டிகிரி’ என செல்லமாக அழைக்கப்படுவார். கடந்த ஆண்டுடன், ஓய்வு பெற்ற இவர் பிரிமியர் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.

இது குறித்து டிவிலியர்ஸ் கூறியது: பிரிமியர் தொடரின் நடப்பு சீசனில் எங்கள் அணியால், ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. பெங்களூரு அணிக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன். உலகம் முழுவதும் பல லீக் தொடர்களில் விளையாடிய அனுபவம் உள்ளது. பிரிமியர் தொடர் போல மற்றவை சிறப்பாக நடத்தப்படுவது இல்லை. உலக கோப்பை தொடரைக்காட்டிலும் இதுதான் சிறப்பானது. பிரிமியர் தொடரில், அம்பயர்களின் தவறான தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்கின்றனர்.

களத்தில் பவுலர்கள் ‘நோ பால்’ வீசுவது, ‘கேட்ச்’ வாய்ப்பை வீரர்கள் தவறவிடுவது போல அம்பயர்களும் சில சமயத்தில் தவறு செய்கின்றனர். மனிதர்கள் தவறு செய்வது இயற்கைதான்.  இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  இவ்வாறு டிவிலியர்ஸ் கூறினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?