Advertisement


‘உலகை’ வெல்லுமா கோஹ்லி படை! * இந்திய அணி அறிவிப்பு

ஏப்ரல் 15, 2019 22:41
 Comments [4]  
 


india, cricket world cup team, kohli
 

 மும்பை: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை.

இங்கிலாந்தில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ல் துவங்குகிறது. ‘நடப்பு சாம்பியன்’ ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் ‘ரவுண்டு ராபின்’ முறையில் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் ‘டாப்–4’ இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

இதற்கான இந்திய அணி தேர்வு நேற்று மும்பையில் நடந்தது. பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். அணி விவரம் வெளியானது.

மூன்றாவது முறையாக உலக கோப்பை தொடரில் களமிறங்கும் கோஹ்லி (2011, 2015, 2019) இம்முறை கேப்டனாக செயல்படுகிறார். ஷிகர் தவான், ரோகித் சர்மாவுடன் மூன்றாவது துவக்க வீரராக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். ‘மிடில் ஆர்டரில்’ கோஹ்லிக்கு அடுத்து நான்காவது இடம் யாருக்கு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

அம்பதி ராயுடு சமீபத்திய போட்டிகளில் ஏமாற்றிய நிலையில் ‘ஆல் ரவுண்டர்’ விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இவருடன் கேதர் ஜாதவ், லோகேஷ் ராகுலும் 4வது இடத்தை கவனித்துக் கொள்வர்.

கார்த்திக் வாய்ப்பு

இரண்டாவது விக்கெட் கீப்பர் இடத்தில் ரிஷாப் பன்ட்டை பின்தள்ளி, தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டார். 91 போட்டிகளில் பங்கேற்ற அனுபவத்தின் அடிப்படையில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அடுத்து ‘சீனியர்’ தோனி, நான்காவது முறையாக உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளார். ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யாவுடன், ஜடேஜாவும் இடம் பிடித்தனர்.

மூன்று ‘வேகம்

பவுலிங்கில் முகமது ஷமி, பும்ரா, புவனேஷ்வர் குமார் என மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றனர். பாண்ட்யா, விஜய் சங்கர் இணைந்து நான்காவது வேகப்பணியை கவனிக்க உள்ளனர். சுழற்பந்து வீச்சில் குல்தீப், சகால் என இருவருக்கு இடம் கிடைத்தது.

நவ்தீப் சைனி, கலீல் அகமது இருவரும் தேர்வாகவில்லை என்றாலும் இங்கிலாந்து செல்வர். யாருக்காவது காயம் எனில் மாற்று வீரராக சேர்க்கப்பட உள்ளனர்.

 அணி விவரம்

கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக், ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, விஜய் சங்கர், குல்தீப், சகால், பும்ரா, புவனேஷ்வர், ஷமி.

 

அணி எப்படி

இந்திய அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள், இரண்டு விக்கெட் கீப்பர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று ‘ஆல் ரவுண்டர்கள்’, இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என 15 வீரர்கள் தேர்வு பெற்றனர்.


முதன் முறையாக... 

உலக கோப்பைக்கான தேர்வு முதன் முறையாக புள்ளி விவரங்கள் அடிப்படையில் நடந்துள்ளது. கடந்த 2017 இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா தோற்ற பிறகு (எதிர்–பாக்.,) இந்திய வீரர்கள் ஒட்டுமொத்த திறமை, எதிரணிகளின் பலம் பலவீனம் என அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டன.

உதாரணமாக ‘டாப்–3’ பேட்ஸ்மேன்கள் எவ்விதமான சூழலில், எந்தெந்த அணிகளுக்கு எதிராக திணறுகின்றனர், கேதர் ஜாதவ் எந்த ஓவர்களில் அதிகமாக ரன்கள் எடுக்கிறார், இங்கிலாந்தின் ஒவ்வொரு மைதானங்களில் எப்படி ரன்கள் எடுக்கப்படும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் நமது சுழற் வீரர்களுக்கு எதிரான எப்படி ரன் சேர்க்கின்றனர் என்பது உட்பட பல்வேறு புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன.

இதை வைத்து ஐந்து பேர் கொண்ட தேர்வுக்குழுவினர் கூட்டத்துக்கு முதல் நாள் யாரை தேர்வு செய்வது, அவரிடம் என்ன எதிர்பார்க்கிறோம் என முடிவுக்கு வந்தனர். கடைசியில் நேற்று நடந்த மூன்றரை மணி நேர கூட்டத்துக்குப் பின் வீரர்கள் அறிவிக்கப்பட்டனர்.

 

 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
anbarasan 3 days ago | Report abuse
கோலியின் தலைமைத்துவ பண்பு சர்சைக்குரியது.சரியான சமயத்தில் சரியான முடிவு எடுக்க தெரியவில்லை.எதெற்கெடுத்தாலும் தோனியை யும்ரோஹித்தையும் நம்பியிருப்பது ஆரோக்கியமானது அல்ல.


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
RAGHU 3 days ago | Report abuse
I wish India will win the world cup this time. But to win the world cup we require a strong cool level headed Captain for the team. Kohli is named as the Captain of our Team and our worry is Kohli. Though Kohli is a great batsman he fails miserably in times of need and his high emotional attitude and his Captaincy is a question. Dhoni is the best Captain India ever had our confidence of winning with Dhoni as our Captain is much higher. Though we expect Kholi to get advise from Dhoni but it is not necessary always. We have no provision for advisor in a Team and Dhoni is a better choice for Captaincy especially in World cup matches.


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
kannaiya srinivasan 3 days ago | Report abuse
வெல்லும்..... ஊசி முனை அளவும் சந்தேகம் வேண்டாம்
Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?