Advertisement


ஹர்திக் பாண்ட்யா விளாசல்: பெங்களூருவை வென்றது மும்பை

ஏப்ரல் 15, 2019 21:55
 Comments  
 


Premier League T20 Cricket, Bangalore, Mumbai, Hardik Pandya
 

மும்பை: பிரிமியர் தொடர் லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் விளாசல் கைகொடுக்க மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி 7வது தோல்வியை பெற்றது.

இந்தியாவில், 12வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதின. மும்பை அணியின் அல்ஜாரி ஜோசப், தோள்பட்டை காயத்தால் பிரிமியர் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா சேர்க்கப்பட்டார். பெங்களூரு அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

கோஹ்லி ஏமாற்றம்: பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி (8) ஏமாற்றினார். பெஹ்ரன்டர்ப் வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி அடித்த பார்த்திவ் (28), ஹர்திக் பாண்ட்யாவிடம் சரணடைந்தார். ஹர்திக் பாண்ட்யா, மலிங்கா பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய டிவிலியர்ஸ், 41 பந்தில் அரைசதம் கடந்தார்.

டிவிலியர்ஸ் அபாரம்: பெஹ்ரன்டர்ப் வீசிய 16வது ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசிய மொயீன் அலி, 31 பந்தில் அரைசதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது மலிங்கா ‘வேகத்தில்’ மொயீன் (50) அவுட்டானார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் (0) ஏமாற்றினார். பும்ரா வீசிய 19வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டிய டிவிலியர்ஸ் (75) ‘ரன் அவுட்’ ஆனார். மலிங்கா வீசிய கடைசி ஓவரில் அக்ஸ்தீப் நாத் (2), பவான் நேகி (0) அவுட்டாகினர்.

பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. முகமது சிராஜ் (0), உமேஷ் யாதவ் (0) அவுட்டாகாமல் இருந்தனர். மும்பை அணி சார்பில் மலிங்கா 4 விக்கெட் கைப்பற்றினார்.

நல்ல துவக்கம்: மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. உமேஷ் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் குயின்டன். மறுமுனையில் அசத்திய ரோகித், நவ்தீப் சைனி, முகமது சிராஜ் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். மொயீன் அலி வீசிய 8வது ஓவரில் ரோகித் (28), குயின்டன் (40) அவுட்டாகினர்.

ஹர்திக் அபாரம்: பவான் நேகி வீசிய 9வது ஓவரில் தொடர்ச்சியாக 2 சிக்சர் அடித்த இஷான் கிஷான் (21), யுவேந்திர சகால் ‘சுழலில்’ சிக்கினார். சூர்யகுமார் யாதவ் (29) ஓரளவு கைகொடுத்தார். குர்னால் பாண்ட்யா (11) நிலைக்கவில்லை. அபாரமாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா, நேகி வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹர்திக் பாண்ட்யா (37 ரன், 16 பந்து) அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் சகால், மொயீன் அலி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?