Advertisement


ஸ்மித், வார்னர் வாய்ப்பு: ஆஸி., அணி அறிவிப்பு

ஏப்ரல் 15, 2019 21:09
 Comments  
 


Australia World Cup Squad, Cricket, Steve Smith, David Warner
 

சிட்னி: உலக கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இடம் பிடித்தனர்.

இங்கிலாந்தில், வரும் மே 30ல் ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் துவங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று அறிவித்தது. இதில் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணைக் கேப்டன் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்டில், சகவீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்கு துணை போன இவர்கள் இருவருக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிந்த நிலையில் தற்போது இவர்கள் பிரிமியர் தொடரில் விளையாடி வருகின்றனர்.

கேப்டனாக ஆரோன் பின்ச் தொடர்கிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. இவர்கள் இருவரும் வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கவுள்ள தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி தேர்வானார். ஆடம் ஜாம்பா, நாதன் லியான் என 2 சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். மிட்சல் ஸ்டார்க், பட் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், நாதன் கூல்டர்–நைல், ஜேசன் பெஹ்ரன்டர்ப் வாய்ப்பு பெற்றனர்.

ஆஸி., அணி: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, பட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ரிச்சர்ட்சன், நாதன் கூல்டர்–நைல், ஜேசன் பெஹ்ரன்டர்ப், நாதன் லியான், ஆடம் ஜாம்பா.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?