Advertisement


சென்னை அணிக்கு 7வது வெற்றி: தாகிர், ரெய்னா அசத்தல் ஆட்டம்

ஏப்ரல் 14, 2019 21:44
 Comments  
 


Premier Cricket, T20 Cricket, Chennai, Kolkata, Imran Tahir, Raina
 

கோல்கட்டா: பிரிமியர் தொடரில் சென்னை அணி 7வது வெற்றியை பதிவு செய்தது. லீக் போட்டியில் இம்ரான் தாகிர் ‘சுழல் ஜாலம்’, ரெய்னா ‘ரன் மழை’ கைகொடுக்க, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் கோல்கட்டா அணி மீண்டும் ஏமாற்றியது.

இந்தியாவில், 12வது பிரிமியர் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின. சென்னை அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. கோல்கட்டா அணியில் ஜோ டென்லி, கார்லஸ் பிராத்வைட், பெர்குசன் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் லின், சுனில் நரைன், ஹாரி கர்னி சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

லின் விளாசல்: கோல்கட்டா அணிக்கு கிறிஸ் லின், சுனில் நரைன் ஜோடி துவக்கம் தந்தது. தீபக் சகார் வீசிய முதல் ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்த கிறிஸ் லின், சகார் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். மிட்சல் சான்ட்னர் ‘சுழலில்’ சுனில் நரைன் (2) சிக்கினார். அபாரமாக ஆடிய லின், 36 பந்தில் அரைசதமடித்தார்.

தாகிர் அசத்தல்: இம்ரான் தாகிர் ‘சுழலில்’ நிதிஷ் ராணா (21), ராபின் உத்தப்பா (0) அவுட்டாகினர். மறுமுனையில் அதிரடி காட்டிய லின், ஜடேஜா வீசிய 14வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்கவிட்டார். தாகிர் வீசிய 15வது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்ப முயன்ற லின் (82), ஷர்துல் தாகூரின் அசத்தலான ‘கேட்ச்’ மூலம் வெளியேறினார். இந்த ஓவரின் 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஆன்ட்ரி ரசல், 4வது பந்தை சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் மீண்டும் சிக்சருக்கு ஆசைப்பட்ட ரசல் (10) பரிதாபமாக வெளியேறினார்.

ஷர்துல் தாகூர் ‘வேகத்தில்’ கேப்டன் தினேஷ் கார்த்திக் (18), சுப்மன் கில் (15) அவுட்டாகினர். கோல்கட்டா அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 161 ரன்கள் எடுத்தது. பியுஸ் சாவ்லா (4) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் இம்ரான் தாகிர் 4 விக்கெட் கைப்பற்றினார்.

ராயுடு ஏமாற்றம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு வாட்சன், டுபிளசி ஜோடி துவக்கம் தந்தது. பிரசித் கிருஷ்ணா வீசிய முதல் பந்தில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை துவக்கிய வாட்சன் (6) நிலைக்கவில்லை. ஆன்ட்ரி ரசல் வீசிய 3வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரி விளாசிய டுபிளசி (24), சுனில் நரைன் ‘சுழலில்’ சிக்கினார். பியுஸ் சாவ்லா பந்தில் அம்பதி ராயுடு (5) சரணடைந்தார். சாவ்லா வீசிய 10வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரி அடித்த கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் வீசிய 11வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார். சாவ்லா ‘சுழலில்’ ஜாதவ் (20) ஆட்டமிழந்தார்.

ரெய்னா நம்பிக்கை: விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக ஆடிய ரெய்னா, பிரசித் வீசிய 5வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கேப்டன் தோனி, குல்தீப் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். சாவ்லா வீசிய 14வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் ரெய்னா. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்த போது நரைன் ‘சுழலில்’ தோனி (16) சிக்கினார். ரெய்னா, தனது 36வது அரைசதத்தை பதிவு செய்தார்.

ஹாரி கர்னி வீசிய 19வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசிய ரவிந்திர ஜடேஜா, பியுஸ் சாவ்லா வீசிய 20வது ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார்.

சென்னை அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (58), ஜடேஜா (31) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹசிக்கு கவுரவம்

சென்னை அணியின் ‘பேட்டிங்’ பயிற்சியாளர் மைக்கேல் ஹசி, ஈடன் கார்டன் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த மணியை அடித்து, கோல்கட்டா–சென்னை அணிகள் மோதிய பிரிமியர் தொடருக்கான லீக் போட்டியை துவக்கி வைத்தார்.

சூப்பர் பீல்டர்

நேற்று, ‘பீல்டிங்கில்’ அசத்திய சென்னை அணியின் டுபிளசி, 4 ‘கேட்ச்’ செய்தார். இதன்மூலம் பிரிமியர் தொடர் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 4 ‘கேட்ச்’ செய்த 6வது வீரரானார். ஏற்கனவே மும்பையின் சச்சின் (எதிர்: கோல்கட்டா, 2008), டில்லியின் டேவிட் வார்னர் (எதிர்: ராஜஸ்தான், 2010), கோல்கட்டாவின் காலிஸ் (எதிர்: டெக்கான், 2011), டில்லியின் ராகுல் டிவாட்யா (எதிர்: மும்பை, 2019), பஞ்சாப் அணியின் டேவிட் மில்லர் (எதிர்: மும்பை, 2019) ஆகியோர் இச்சாதனை படைத்திருந்தனர்.

4வது பவுலர்

‘சுழலில்’ அசத்திய சென்னை அணியின் இம்ரான் தாகிர் (40 ஆண்டு, 18 நாள்) 4 ஓவரில், 27 ரன் வழங்கி 4 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் பிரிமியர் தொடரில் ஒரு இன்னிங்சில் 4 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய, 40 வயதுக்கு மேற்பட்ட 4வது பவுலரானார். ஏற்கனவே ஷேன் வார்ன், பிரவிண் தாம்பே, பிராட் ஹாக் இம்மைல்கல்லை எட்டியிருந்தனர்.

7ல் வெற்றி

சென்னை அணி, இதுவரை விளையாடிய 8 போட்டியில் 7ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதற்கு முன், மும்பை (2010), பஞ்சாப் (2014) அணிகள் முதல் 8 போட்டியில், 7ல் வெற்றி கண்டன. இவ்விரு அணிகளும் அந்த சீசனில் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்தன.

* இன்னும் ஒரு போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில், ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்யலாம்.

2013க்கு பின்...

கோல்கட்டாவை வென்ற சென்னை அணி, 2013க்கு பின் ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் வெற்றியை பெற்றது.

‘ஹாட்ரிக்’ தோல்வி

சமீபத்தில் சென்னை, டில்லி அணிகளிடம் வீழ்ந்த கோல்கட்டா அணி நேற்று மீண்டும் சென்னை அணியிடம் தோற்றது. இதனையடுத்து பிரிமியர் லீக் தொடரில், 2014க்கு பின் முதன்முறையாக ‘ஹாட்ரிக்’ தோல்வியை பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?