Advertisement


ஆண்கள் ஆதிக்கம் குறைந்தது: சானியா பெருமை

ஏப்ரல் 13, 2019 21:11
 Comments  
 


Country needs to do lot more for women empowerment in sports, Sania
 

புதுடில்லி: ‘‘விளையாட்டுத்துறையில் ஆண்களின் ஆதிக்கம் சற்று மாறிவிட்டது. செய்னா, சிந்து, மேரி கோம் என உள்ளிட்ட வீராங்கனைகள் ஜொலிக்கின்றனர்,’’ என, இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா கூறினார்.

இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, 32. இதுவரை இரட்டையர் பிரிவில் ஆறு கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றுள்ளார். கடந்த ஆண்டு ஆண் குழந்தைக்கு தாயானார். இதனால், போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் உள்ளார்.

தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற சானியா கூறியது: பத்து ஆண்டுக்கு முன், விளையாட்டுத்துறையில் வீரர்கள்தான் ஆதிக்கம் செலுத்தினர். தற்போது இந்த நிலை மாறிவிட்டது. செய்னா, சிந்து (பாட்மின்டன்), மேரி கோம் (குத்துச்சண்டை), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்) என குறைந்தது 10 நட்சத்திர வீராங்கனைகளின் பெயர்களை சொல்ல முடியும். எதிர்காலத்தில் இன்னும் முன்னேற்றத்தை எட்ட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாகுபாடு வேண்டாம்

ஆண்களுக்கு நிகரான பரிசுத்தொகை பெண்களுக்கும் தரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறேன். இந்த பாகுபாடு உலக விளையாட்டு அரங்கில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வீரர்களைப்போல வீராங்கனைகளுக்கும் எதற்காக சம பரிசுத்தொகை தர வேண்டும் என்ற கேள்வியே எழக்கூடாது. இந்த விவாதம், தேவை இல்லை என்றே நினைக்கிறேன். தாயானபின்தான், சிறந்த மனிதராக மாறி உள்ளேன். தன்னலமற்ற அன்பை வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு சானியா கூறினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?