Advertisement


‘சூப்பர்’ கோப்பை வெல்லுமா சென்னை * இன்று கோவாவுடன் பைனல்

ஏப்ரல் 12, 2019 19:30
 Comments  
 


FC Goa look for redemption of ISL title loss, seek Super Cup crown, CHENNAI
 

புவனேஷ்வர்: சூப்பர் கோப்பை தொடரில் இன்று நடக்கும் பைனலில் ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கும் சென்னை, கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐ.எஸ்.எல்., மற்றும் ஐ–லீக் தொடரின் ‘டாப்–6’ அணிகள் உட்பட மொத்தம் 16 அணிகள் மோதும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் ஐ–லீக் சாம்பியன் சென்னை அணி தோல்வியடைந்தது.

இன்று நடக்கும் பைனலில் ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கும் சென்னை, கோவா அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது சென்னை. மொத்தம் பங்கேற்ற 18 போட்டிகளில் 2ல் மட்டும் வென்று (13 தோல்வி, 3 ‘டிரா’) கடைசி இடம் பிடித்து வெளியேறியது. 

இதற்கு மாறாக சூப்பர் கோப்பை தொடரில் மும்பை, வடகிழக்கு அணிகளை வீழ்த்தியது. அரையிறுதியில் கோல்கட்டாவை சாய்த்தது. இன்று சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஐ.எஸ்.எல்., தொடரில் அடைந்த ஏமாற்றத்தை சரி செய்யலாம். இதற்கு தலா 2 கோல் அடித்த அனிருத் தபா, வினீத் கைகொடுத்தால் நல்லது.

கோவா நம்பிக்கை

சமீபத்தில் முடிந்த ஐ.எஸ்.எல்., தொடரின் பைனலில், பெங்களூருவிடம் கோப்பை பறிகொடுத்த அணி கோவா. சூப்பர் கோப்பை தொடரில் இந்தியன் ஆரோஸ், ஜாம்ஷெட்பூர், ஐ–லீக் சாம்பியன் சென்னையை வீழ்த்தி, பைனலுக்குள் நுழைந்தது.

இந்த 3 போட்டியில் 10 கோல் அடித்து மிரட்டுகிறது. இந்த மிரட்டல் இன்றும் தொடர்ந்தால், சென்னைக்கு சவால் கொடுத்து கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

–––––––––––––––

 

 

 

 சாம்பியன் பெங்களூரு அணி, ஐ–லீக் தொடரில் சாம்பியன் ஆன ‘நம்ம’ சென்னை அணியை சந்தித்தது. 

போட்டியின் 15வது நிமிடத்தில் சென்னை அணியின் கோர்டில்லோ ஒரு கோல் அடிக்க முதல் பாதியில் 1–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் மிரட்டிய சென்னை அணிக்கு 55 வது நிமிடம் பெட்ரோ மான்ஜி தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 65 நிமிடம் பெங்களூரு அணிக்கு சுனில் செத்ரி ஒரு கோல் அடித்தார். 

இதன் பின் இருதரப்பிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. முடிவில் சென்னை அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?