Advertisement


டில்லி அணிக்கு கோப்பை: இஷாந்த் சர்மா நம்பிக்கை

மார்ச் 15, 2019 22:25
 Comments  
 


ishant sharma, delhi team, ipl
 

புதுடில்லி: ‘‘ ஐ.பி.எல்., தொடரில் 12 ஆண்டுக்குப் பின் டில்லி அணிக்காக விளையாடுவது பெருமையாக உள்ளது,’’ என இஷாந்த் சர்மா தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி துவங்குகிறது. சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. 

இதில் பங்கேற்கும் டில்லி அணி இம்முறை, டில்லி கேபிடல்ஸ் என்ற பெயரில் களமிறங்குகிறது. இந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது: எனது 17 வயதில் இருந்து டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் விளையாடி வருகிறேன். இம்மைதானத்தில் எனக்கு மறக்க முடியாத பல்வேறு நினைவுகள் உள்ளன. இது எனக்கு மட்டுமல்ல, டில்லி அணிக்காக களமிறங்கும் அனைவருக்கும் இந்த எண்ணம் இருக்கும்.

ஏனெனில் இங்கு தான் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கை துவங்கி இருக்கும். ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா, டில்லி, புனே என பல்வேறு அணிகளுக்காக ((76 போட்டி, 58 விக்.,) பங்கேற்றேன். 12 ஆண்டுகள் கழித்து முதன் முறையாக எனது டில்லி அணிக்காக விளையாடும் வாய்ப்பு பெற்றுள்ளேன். ‘ஸ்பெஷலான’ இந்த தருணத்தால் மிகவும் பெருமையாக உள்ளது. என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுவேன். எங்கள் டில்லி அணி கோப்பை வெல்லும் என நம்புகிறேன். இவ்வாறு இஷாந்த் சர்மா கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?