Advertisement


யூத் தடகளம்: தமிழக வீராங்கனை தங்கம்

மார்ச் 15, 2019 21:16
 Comments  
 


Thabitha Philip Maheswaran, Asian Youth Athletics Championships
 

ஹாங்காங்: ஆசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை தபிதா தங்கப் பதக்கம் வென்றார்.

ஹாங்காங்கில், 3வது ஆசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் பந்தய துாரத்தை 13.86 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்த சென்னையை சேர்ந்த தபிதா பிலிப் மகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் இந்தியாவின் விபின் குமார் அதிகபட்சமாக 69.63 மீ., துாரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் இந்தியாவின் ஹர்ஷிதா ஷெராவாத், 61.93 மீ., துாரம் எறிந்து 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார். இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம். மற்ற போட்டிகளில் இந்தியாவின் தீபக் யாதவ் (‘போல் வால்ட்’, 4.70 மீ.,), அஜய் (1500 மீ., ஓட்டம், 57.25 வினாடி) தலா ஒரு வெண்கலம் கைப்பற்றினர்.

முதல் நாள் முடிவில் இந்தியாவுக்கு 2 தங்கம், ஒரு வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 5 பதக்கம் கிடைத்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?