Advertisement


நியூசிலாந்து–வங்கதேச தொடர் ரத்து

மார்ச் 15, 2019 12:52
 Comments  
 


Bangladesh tour of NZ called off after Christchurch terror attack
 

 கிறைஸ்ட்சர்ச்: துப்பாக்கிசூடு தாக்குதலை அடுத்து வங்கதேசம், நியூசிலாந்து அணிகள் மோத இருந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. 

நியூசிலாந்து சென்ற வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்டில் நியூசிலாந்து வென்று 2–0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் நாளை துவங்க இருந்தது. 

இதனிடையே வங்கதேச அணி வீரர்கள் மஜித் அல் நுார் மசூதிக்கு தொழுகை நடத்த சென்றனர். அப்போது திடீரென அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். 

இதையடுத்து வீரர்கள் அனைவரும் ஓட்டலில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரு அணிகள் மோத இருந்த மூன்றாவது டெஸ்ட் நாளை துவங்க இருந்தது. தற்போது இந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. 

வங்கதேச வீரர்களை பாதுகாப்பாக நாடு திருப்பி அனுப்ப தேவையான ஏற்பாடுகளை நியூசிலாந்து கிரிக்கெட் போர்டு செய்து வருகிறது. 

இதற்கு முன்...

கிரிக்கெட் தொடர்களின் போது நடந்த தாக்குதல் காரணமாக ரத்தான சில தொடர்கள் விவரம்: 

* கடந்த 2002ல் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றது நியூசிலாந்து. இரு அணி வீரர்கள் கராச்சி ஓட்டலில் தங்கினர். வெளிப்பகுதியில் தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. உடனடியாக அடுத்த விமானத்தை பிடித்து நியூசிலாந்து வீரர்கள் நாடு திரும்பினர். 

* கடந்த 2008ல் இந்தியா வந்த இங்கிலாந்து அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் 5 போட்டிகளில் இந்தியா வென்றது. 6, 7வது போட்டி கவுகாத்தி, டில்லியில் நடக்க இருந்தது. அப்போது மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரை ரத்து செய்து நாடு திரும்பியது.

* 2009ல் இலங்கை அணி, பாகிஸ்தான் சென்றது. லாகூரில் நடந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் பங்கேற்க வீரர்கள் பஸ்சில் சென்ற போது, பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் ஆறு இலங்கை வீரர்களுக்கு காயம் ஏற்பட, டெஸ்ட் தொடர் ரத்தானது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?