Advertisement


நுாலிழையில் தப்பிய வங்கதேச வீரர்கள்: கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி

மார்ச் 15, 2019 12:50
 Comments  
 


Bangladesh Test cricket team flees mosque shooting
 

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர். நுாலிழையில் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் உயிர் தப்பினர்.

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வங்கதேச அணி நியூசிலாந்து சென்றது. முதல் இரு டெஸ்டில் வென்ற நியூசிலாந்து 2–0 என தொடரை கைப்பற்றியது. 

மூன்றாவது டெஸ்ட் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லே ஓவல் மைதானத்தில் இன்று துவங்க இருந்தது. இதற்கான பயிற்சிக்கு லிட்டன் தாஸ், நயீஸ் இஸ்லாம் தவிர மற்ற 17 வங்கதேச அணி வீரர்கள் சென்றனர். லேசாக மழை பெய்ததால் அருகில் இருந்த மஜித் அல் நுார் மசூதியில் தொழுகை நடத்தி விட்டு பிறகு மைதானம் செல்ல முடிவு செய்து, பஸ்சை நிறுத்தினர். அப்போது 45 மீ., துாரத்தில் இருந்த மசூதியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிசூடு நடத்தும் சப்தம் கேட்டது. வங்கதேச வீரர்கள் பஸ்சை விட்டு இறங்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

சில நிமிடங்களுக்குப் பின், பஸ்சில் இருந்து இறங்கி வேகமாக அருகில் இருந்த ஹாக்லே ஓவல் மைதானத்துக்குள் ஓடினர். பிறகு அங்கிருந்து ஓட்டல் ரூம் சென்றடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி தப்பினர். பின் லின்வுட் மசூதி பகுதியிலும் துப்பாக்கிசூடு  நடந்தது. இதில் 8 என மொத்தம் 49 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக நியூசிலாந்து போலீசார் சந்தேகத்திற்கு இடமான 4 பேரை கைது செய்துள்ளனர். இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட்போர்டு (பி.சி.பி.,) வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில், ‘துப்பாக்கிசூடு நடந்த இடத்தில் இருந்த அனைத்து வங்கதேச வீரர்களும் பாதுகாப்பாக திரும்பி விட்டனர். தொடர்ந்து இவர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்,’ என தெரிவித்தது.

பிரார்த்தனை செய்யுங்கள்

வங்கதேச அணி வீரர் முஷ்பிகுர் ரகிம் கூறுகையில்,‘‘ கிறைஸ்ட்சர்ச் மசூதி துப்பாக்கிசூடு சம்பவத்தில் இருந்து இறைவன் கருணையால் தப்பி விட்டோம். உண்மையில் நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் தான். இதுபோன்ற சம்பவத்தை மீண்டும் பார்க்க விரும்பவில்லை. எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்,’’ என்றார்.

அந்த 3 நிமிடம்

வங்கதேச அணியின் மானேஜர் காலித் மசூத் கூறுகையில்,‘‘ பஸ்சில் 17 பேர் இருந்தோம். சம்பவ இடத்துக்கு அருகில் சென்று பிறகு மீண்டு வந்துள்ளோம். 3 நிமிடத்துக்கு முன் வந்திருந்தால் மசூதிக்குள் சென்றிருப்போம். மோசமான சம்பவம் நடந்திருக்கும். நல்லவேளையாக தப்பினோம். சினிமாவில் வருவது போல மக்கள் ரத்தவெள்ளத்தில் சரிந்ததை பார்த்தோம். உடனடியாக அனைவரும் தலையை குனிந்து 10 நிமிடம் பதுங்கி இருந்தோம். பின் பின் வாசல் வழியாக தப்பிச் செல்வது என முடிவு செய்து, வேகமாக ஓடி டிரசிங் ரூம் அடைந்தோம். எங்கள் பஸ்சில் இருந்து டிரசிங் ரூமை அடைய சில நிமிடங்கள் தான் தேவைப்பட்டன. அதேநேரம் இது தான் எனது வாழ்க்கையின் நீண்ட நிமிடங்கள். ரத்தம், உடல்கள் பல இடத்தில் கிடந்தன. சீனியர் வீரர் ஒருவர் என்னைப் பிடித்துக் கொண்டு கதறி அழுதார்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?