Advertisement


சோதனை தீரவில்லை... * பாடம் கற்குமா இந்திய அணி

மார்ச் 14, 2019 22:21
 Comments [1]  
 


india, australia, odi series, kohli,
 

 புதுடில்லி: சோதனை என்ற பெயரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி. இருப்பினும் உலக கோப்பை தொடருக்கு முன் இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு எழுச்சி பெற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் வரும் மே 30ல் இங்கிலாந்தின் லண்டனில் துவங்குகிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்றது. இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து ‘உலக’ இந்திய அணியை முடிவு செய்ய பல சோதனை முயற்சிகள் நடந்தன.

முதல் இரு போட்டியில் தடுமாறி வென்ற இந்தியா, அடுத்த இரண்டில் தோற்றது. கடைசி மற்றும் ஐந்தாவது போட்டியிலும் சோதனை தொடர, நீண்ட இடைவெளிக்குப் பின் சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை பறிகொடுத்தது இந்தியா. தொடர்ச்சியான சோதனை முயற்சிகள் கடைசி வரை பலன் தரவில்லை. மூன்றாவது துவக்க வீரர், இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கு விடை  கிடைக்கவில்லை.

‘நம்பர்–4’ சோகம்

2011ல் இந்தியா உலக கோப்பை வென்ற போது சச்சின், சேவக், காம்பிர் அடுத்து கோஹ்லி வந்தார். இம்முறை ரோகித், தவான் அடுத்து கோஹ்லிக்குப் பின் 4வது இடத்தில் களமிறங்க இன்னும் சரியான வீரர் தேறவில்லை.

ரெய்னா, யுவராஜ், ரகானே, தினேஷ் கார்த்திக் வந்தனர், சென்றனர். நியூசிலாந்து தொடரில் நம்பிக்கை தந்த ராயுடு மீண்டும் ஏமாற்ற, லோகேஷ் ராகுல், ரிஷாப் பன்ட் இடம் பெற்றனர். இவர்களும் வாய்ப்பை வீணடிப்பதால், இந்த இடத்தில் இனி தோனி வருவார் எனத் தெரிகிறது.

‘ஐந்தாவது’ யார்

ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற ஸ்டோக்ஸ், கிறிஸ் ஸ்டோக்ஸ், மொயீன் அலீ (இங்கிலாந்து) போன்ற ‘ஆல் ரவுண்டர்கள்’ அணிக்கு மிக முக்கியம். இவர்கள் 6 முதல் 8வது இடத்தில் களமிறங்கி பேட்டிங்கில் பலம் சேர்ப்பர்.

இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மட்டும் தான் உள்ளார். கேதர் ஜாதவ், சேவக் போல ‘பார்ட்னர்ஷிப்பை’ உடைப்பதில் தேர்ந்தவர் என்பதை நிரூபித்துள்ளார். விஜய் ஷங்கரும் போட்டியில் இருந்தாலும் ஐந்தாவது பவுலர் யார் என்பதற்கு தீர்வு இல்லை.

ஜடேஜா சரியா

2015 உலக கோப்பை தொடருக்குப் பின் ஒருநாள் அரங்கில் ஜடேஜா இதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்காமல் விட, போட்டி ‘டை’ ஆனது. ஆசியாவின் சிறந்த பீல்டர் இவர் என்றாலும் தற்போதைய தொடரில் 3 போட்டியிலும் பேட்டிங் திறமை நிரூபிக்கவில்லை.

‘வால்’ இல்லை

இந்தியாவுக்கு எதிரான ‘டுவென்டி–20’, ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா வெல்ல ஜேய் ரிச்சர்ட்சன், கம்மின்ஸ் என வால் வரிசை (‘டெயிலெண்டர்கள்) வீரர்கள் ரன் குவிப்பை வழங்கியது தான் முக்கிய காரணம். இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி என முன்னணி பவுலர்கள் பேட்டிங் திறமை மோசமாக உள்ளது.

நெருக்கடியான சர்வதேச கிரிக்கெட் அட்டவணைகளால் இரு அணிகள் மோதும் பெரும்பாலான தொடர்கள் விரைவில் மறக்கப்பட்டு விடும். ஆஸ்திரேலிய தொடரின் முடிவை ஐ.பி.எல்., தொடர் துவங்கியதும் ரசிகர்கள் மறந்து விடுவர். இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் உலக கோப்பை தொடரில் இந்தியா எழுச்சி பெற உதவும் என நம்பலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Aravind one week ago | Report abuse
போனவை போகட்டும், இனி இந்திய அணி எழுச்சி பெற்று பீனிக்ஸ் பறவை போல இடைவிடாத முயற்சியால் உலக கோப்பையை வெல்லட்டும் என இந்தியர்கள் வாழ்த்துவோமாக




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?