Advertisement


இனி ஒரே பந்து தானா? * கவாஸ்கர் எதிர்ப்பு

மார்ச் 14, 2019 22:04
 Comments  
 


Gavaskar slams MCC proposal of one ball in Tests
 

 புதுடில்லி: உலகம் முழுவதும் டெஸ்ட் போட்டிகளில் இனிமேல் ஒரே வகை பந்து மட்டும் பயன்படுத்தப்படும் என்ற பரிந்துரைக்கு கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலக கோப்பை தொடருக்குப் பின், ஐ.சி.சி., சார்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் துவங்கவுள்ளது. இதையடுத்து டெஸ்ட் போட்டிகளில் தற்போது பயன்படுத்தப்படும் குக்கபுரா, டியூக், எஸ்.ஜி., என மூன்று வகைக்குப் பதில் உலகம் முழுவதும் ஒரே வகை (‘டியூக்’) பந்தினை மட்டும் பயன்படுத்தலாம் என இங்கிலாந்தின் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.,) பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியது:

தற்போது உலகம் முழுவதும் ஒரே வகை பந்தை பயன்படுத்தலாம் என எம்.சி.சி., தெரிவித்துள்ளது. இதற்கு முன் அனைத்து மைதானங்கள் ஒரே அளவில் இருக்க வேண்டும், வீரர்கள் பயன்படுத்தும் பேட் அளவு ஒரே மாதிரியாக (எடை) இருக்க வேண்டும் உட்பட பல்வேறு விஷயங்களை சரிப்படுத்த வேண்டும்.

சவாலான அன்னிய மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக முடிவுகள் இருக்கக் கூடாது. ஏனெனில் சொந்தமண், அன்னிய மண் என்பது கிரிக்கெட்டில் முக்கிய அங்கம். இதை அந்தந்த நாடுகளின் முடிவுக்கு விட்டு விட வேண்டும். அன்னிய மண்ணில் அறிமுகம் இல்லாத சூழ்நிலையில் வீரர்கள் செயல்படுவதைப் பொறுத்து தான் அவர்கள் சிறந்தவர்களா இல்லையா என முடிவு செய்கின்றனர்.

உலக கிரிக்கெட் கமிட்டி என்பது கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா, தேசிய கிரிக்கெட் கிளப், கோல்கட்டா அல்லது மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் போல செயல்படுகிறது. ஒரே வகை பந்தினை மட்டும் பயன்படுத்துவது என்ற முடிவுக்கு பெரும்பாலானோர் சீரியசாக எடுத்துக் கொள்ளாதது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?