Advertisement


சாம்பியன்ஸ் லீக்: காலிறுதியில் பார்சிலோனா

மார்ச் 14, 2019 20:16
 Comments  
 


Champions League Football, Barcelona, Lyon, Messi
 

பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் காலிறுதிக்கு பார்சிலோனா அணி முன்னேறியது. இதன் ‘ரவுண்டு–16’ சுற்றுக்கான 2வது போட்டியில் 5–1 என்ற கோல் கணக்கில் லியான் அணியை வென்றது.

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடரின் 12வது சீசன் நடக்கிறது. இதன் ‘ரவுண்டு–16’ போட்டியில் பார்சிலோனா (ஸ்பெயின்), லியான் (பிரான்ஸ்) அணிகள் மோதின. இவ்விரு அணிகளுக்கு இடையில் பிரான்சில் நடந்த முதல் போட்டி 0–0 என, ‘டிரா’ ஆனது.

‘ரவுண்டு–16’ சுற்றுக்கான இரண்டாவது போட்டி ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடந்தது. இதில் அபாரமாக ஆடிய பார்சிலோனா அணி 5–1 என வென்றது. பார்சிலோனா அணிக்கு மெஸ்சி (17, 78வது நிமிடம்), பிலிப் கவுடினோ (31வது), ஜெரார்டு பிக் (81வது), டெம்பெலே (86வது) கோலடித்து கைகொடுத்தனர்.

இரண்டு போட்டிகளின் முடிவில் பார்சிலோனா அணி 5–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.

லிவர்பூல் முன்னேற்றம்: மற்றொரு ‘ரவுண்டு–16’ போட்டியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி), லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் மோதின. இங்கிலாந்தில் நடந்த முதல் போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது. ஜெர்மனியில் நடந்த 2வது போட்டியில் அசத்திய லிவர்பூல் அணி 3–1 என வென்றது.

இரண்டு போட்டிகளின் முடிவில் லிவர்பூல் அணி 3–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?