Advertisement


டில்லி அணிக்கு கங்குலி ஆலோசகர்

மார்ச் 14, 2019 20:07
 Comments  
 


Ganguly, IPL T20 Cricket, Delhi Capitals, Advisor
 

புதுடில்லி: ஐ.பி.எல்., டில்லி அணிக்கு முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் வரும் 23ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள டில்லி டேர்டெவில்ஸ் அணி, இம்முறை டில்லி கேபிடல்ஸ் என்ற புதிய பெயரில் களமிறங்குகிறது.

டில்லி அணி ஒரு முறை கூட ஐ.பி.எல்., கோப்பை வென்றதில்லை. இரண்டு முறை (2008, 2009) அரையிறுதி வரை சென்ற டில்லி அணி, ஒரு முறை (2012) ‘பிளே–ஆப்’ சுற்றோடு திரும்பியது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் உள்ளார்.

இந்த சீசனுக்கான டில்லி அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர், பாண்டிங்குடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இதுகுறித்து கங்குலி கூறுகையில், ‘‘டில்லி அணியில் இணைந்தது மகிழ்ச்சி. இந்த அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இணைந்து பணியாற்ற இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது,’’ என்றார்.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டில்லி அணி, தனது முதல் போட்டியில் மும்பை அணியை (மார்ச் 24, இடம்: மும்பை, வான்கடே மைதானம்) சந்திக்கிறது. சொந்த மண்ணில் (டில்லி, பெரோஷா கோட்லா மைதானம்) ‘நடப்பு சாம்பியன்’ சென்னை அணியை மார்ச் 26ல் எதிர்கொள்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?