Advertisement


ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மார்ச் 13, 2019 21:27
 Comments  
 


Paribas Open Tennis, Indian Wells, Djokovic, Osaka
 

இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச், ஜப்பானின் ஒசாகா, ருமேனியாவின் சிமோனா ஹாலெப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தோல்வியடைந்தனர்.

அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரைபர் மோதினர். இதில் ஜோகோவிச் 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6–3, 6–1 என, அர்ஜென்டினாவின் தியாகோ ஸ்வார்ட்ஸ்மன்னை வீழ்த்தினார். மற்ற 3வது சுற்றுப் போட்டிகளில் ஜப்பானின் கெய் நிஷிகோரி, ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், குரோஷியாவின் மரின் சிலிக் உள்ளிட்டோர் தோல்வியடைந்தனர்

ஒசாகா ஏமாற்றம்: பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் உலகின் ‘நம்பர்–1’ ஜப்பானின் நவோமி ஒசாகா, சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் மோதினர். இதில் ஒசாகா 3–6, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்ந்தார். மற்றொரு போட்டியில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப் 2–6, 6–3, 2–6 என, செக்குடியரசின் மார்கெடாவிடம் வீழ்ந்தார்.

மற்ற 4வது சுற்றுப் போட்டிகளில் ஜெர்மனியின் கெர்பர், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் முகுருஜா, செக்குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?