Advertisement


கோட்லாவில் கோட்டைவிட்ட இந்தியா: ஆஸி.,க்கு ‘ஹாட்ரிக்’ வெற்றி

மார்ச் 13, 2019 13:50
 Comments [2]  
 


Australia, india, one day series, kohli
 

புதுடில்லி: ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்திய அணி, தொடரை 2–3 என இழந்தது. கேதர் ஜாதவ், புவனேஷ்வர் போராட்டம் வீணானது. கவாஜா, ஜாம்பா கைகொடுக்க, ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச்சென்றது.

இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகள் முடிவில் தொடர் 2–2 என சமநிலையில் இருந்தது. 

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி டில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் சகால், லோகேஷ் ராகுல் நீக்கப்பட்டு ஜடேஜா, ஷமி சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ், பெஹ்ரன்டர்ப்பிற்குப்பதில் ஸ்டாய்னிஸ், லியான் வாய்ப்பு பெற்றனர்.

கவாஜா சதம்

ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் பின்ச், கவாஜா ஜோடி அசத்தலான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தபோது, பின்ச் (27) ஆட்டமிழந்தார். கவாஜா ஒரு நாள் அரங்கில் இரண்டாவது சதம் எட்டினார். இவர் புவனேஷ்வர் ‘வேகத்தில்’ 100 ரன்களில் சிக்கினார்.

திருப்பம் தந்த ஜடேஜா

பின் ஜடேஜா ‘சுழலில்’ மேக்ஸ்வெல் (1) அவுட்டானார். ஷமி ‘வேகத்தில்’ ஹேண்ட்ஸ்கோம்ப் (52) அவுட்டானார். டர்னர், ஸ்டாய்னிஸ் தலா 20 ரன்களில் திரும்பினர். அலெக்ஸ் கேரியும் (3) விரைவில் ஆட்டமிழந்தார். கடைசி நான்கு ஓவரில் கம்மின்ஸ் (15), ஜியே ரிச்சர்ட்சன் (29) பவுண்டரிகளாக விளாச, அணிக்கு 42 ரன் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 272 ரன்கள் எடுத்தது. லியான் (1) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

மோசமான துவக்கம்

பின் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் (12) ஏமாற்றினார். ஸ்டாய்னிஸ் பந்தில் கோஹ்லி (20) சிக்க, அரங்கம் அதிர்ச்சியில் உறைந்தது. ரிஷாப் 16 ரன்களில் லியான் பந்தில் சரணடைந்தார். ரோகித் அரை சதம் கடந்தார்.

கேதர்–புவனேஷ்வர் ஆறுதல்

ஜாம்பாவின் ‘சுழல்’ வலையில் முதலில் விஜய் சங்கர் (16) ஆட்டமிழந்தார். மீண்டும் வந்த ஜாம்பா இம்முறை இரட்டை ‘அடி’ கொடுத்தார். 29வது ஓவரில் ரோகித் (56), ஜடேஜாவை (0) அவுட்டாக்கினார். பின் கேதர் ஜாதவ், புவனேஷ்வர் ஜோடி போராடியது. மேக்ஸ்வெல், லியான் பந்துவீச்சில் ஜாதவ் பவுண்டரி அடித்தார். ஜாம்பா பந்தை புவனேஷ்வர் சிக்சருக்கு பறக்கவிட, இந்திய ரசிகர்கள் முகத்தில் லேசான நம்பிக்கை தெரிந்தது. 7வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில், கம்மின்ஸ் ‘வேகத்தில்’ புவனேஷ்வர் (46) சிக்கினார். ரிச்சர்ட்சன் வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்தை ஜாதவ் அடித்தார். பவுண்டரி எல்லையில் இருந்த மேக்ஸ்வெல் ‘கேட்ச்’ பிடிக்க ஜாதவ் (44) சோகத்துடன் திரும்பினார். ஷமி (3), குல்தீப் (8) விரைவில் கிளம்ப, இந்திய அணி 50 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. ஜாம்பா அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார்.

இத்தொடரின் மூன்று, நான்காவது போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா நேற்றும் அசத்த, ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Lakshminarayanan one week ago | Report abuse
இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் விழித்தி சாதனை படைத்தது. இந்தியா மண்ணில் டீ௨௦ மற்றும் ஒருநாள் போட்டியில் தொடரை கோட்டை விட்டது. அணி தேர்வு சரியாகவே இல்லை இந்தியா அணிக்கு. வேர்ல்ட் கப் முன்னதாக எஸ்பிஎரிஎன்ஸ் பண்ணுகிறோம் என்ற பேரில் தேர்வு செய்தது. நம்மிடம் நல்ல ஆல்ரவுண்டர்கள் இருந்தும் அவர்களை தேர்தெடுக்க வில்லை. ரிஷப பந்த் அண்ட் விஜய்சங்கர் பொறுப்பாக அடித்திருக்க வேண்டும். நம்மிடம் நல்ல பார்ட்னெர்ஷிப் இல்லை. மிடில் ஆர்டர் சரியில்லை. ஜடேஜா பௌலிங் நன்றாக போட்டார். பேட்டிங் இல்லை .வ்ரிஸ்ட் ஸ்பின்னர் அண்ட் குலதீப் யதாவுக்கு ஓய்வு கொடுத்து. இரண்டு வருடமாக அஷ்வின் ஒனிடாய் மேட்ச் ஆடவில்லை . எஸ்பிஎரிஎன்ஸ் அஸ்வினுக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம். தவனுக்கு ஓய்வு கொடுத்து அஜன்ய ரஹணக்கு சான்ஸ் கொடுத்திருக்கலாம். மொத்தத்தில் உலக கோப்பைக்காவது இந்தியா நல்ல டீம் செலக்ட் செய்து வெற்றிபெறவேண்டும்.


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
E. RAJAVELU one week ago | Report abuse
தினேஷ் கார்த்திக்கை சேர்க்காதவரை இந்தியா வெற்றி பெறுவது சாத்தியமில்லை.




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?