Advertisement


போபண்ணா ஜோடி ஏமாற்றம்

மார்ச் 11, 2019 19:41
 Comments  
 


Paribas Open Tennis, Indian Wells, United States, Rohan Bopanna
 

இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் ஷபோவலோவ் ஜோடி தோல்வியடைந்து ஏமாற்றியது.

அமெரிக்காவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் பேபியோ பாக்னினி ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 4–6 என இழந்த போபண்ணா ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6–1 எனக் கைப்பற்றி பதிலடி தந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் டை பிரேக்கரில் ஏமாற்றிய இந்திய–கனடா ஜோடி 8–10 என கோட்டைவிட்டது.

முடிவில் போபண்ணா ஜோடி 4–6, 6–1, 8–10 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?