Advertisement


குன்னேஸ்வரன் கலக்கல்

மார்ச் 10, 2019 14:44
 Comments  
 


Prajnesh stuns Basilashvili at Indian Wells
 

இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர் குன்னேஸ்வரன், ஜார்ஜியாவின் நிக்கோலசை வீழ்த்தினார். 

அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் தகுதிச்சுற்றின் மூலம் முன்னேறிய தமிழகத்தின் குன்னேஸ்வரன் (97வது இடம்), உலக தரவரிசையில் 18வது இடத்திலுள்ள ஜார்ஜியாவின் நிக்கோலஸ் பசிலாஸ்விலியை சந்தித்தார். முதல் செட்டை 6–4 என கைப்பற்றிய குன்னேஸ்வரன், அடுத்த செட்டை 6–7 என போராடி பறிகொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் அசத்திய இவர் 7–6 என தனதாக்கினார். இரண்டு மணி நேரம் 31 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், குன்னேஸ்வரன் 6–4, 6–7, 7–6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 

இதன் மூலம், குன்னேஸ்வரன் தனது டென்னிஸ் வாழ்க்கையில் சிறந்த வெற்றியை பதிவு செய்தார். இதற்கு முன், ஸ்டட்கர்ட் ஓபனில் (2018) 23வது இடத்திலிருந்த டேனிஷ்  சபோவலோவை (கனடா) வீழ்த்தியதே சிறந்த வெற்றியாக இருந்தது.

* இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, கனடாவின் டேனிஷ் சபோவலோவ் ஜோடி 6–4, 6–4 என பிரிட்டனின் ஜெமி முர்ரே, பிரேசிலின் புரூனோ ஜோடியை வீழ்த்தியது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?