Advertisement


நம்ம சென்னை சாம்பியன்! * ‘ஐ–லீக்’ கால்பந்து தொடரில் அபாரம்

மார்ச் 09, 2019 22:38
 Comments  
 


i league, india, chennai city fc,
 

 கோயம்புத்துார்: ‘ஐ–லீக்’ கால்பந்து தொடரில் முதன் முறையாக சாம்பியன் ஆனது சென்னை சிட்டி அணி. நேற்று நடந்த கடைசி போட்டியில் பஞ்சாப் அணியை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இந்தியாவில் ‘ஐ–லீக்’ உள்ளூர் கால்பந்து தொடர் நடந்தது. லீக் சுற்று முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் கோப்பை வெல்லும். புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடத்தில் சென்னை (40), ஈஸ்ட் பெங்கால் (39), காஷ்மீர் (36) அணிகள் இருந்தன.

நேற்று கடைசி கட்ட லீக் போட்டிகள் நடந்தன. கோயம்புத்துாரில் நடந்த  போட்டியில் சென்னை சிட்டி, மினர்வா பஞ்சாப் (17 புள்ளி) அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் வென்றால் கோப்பை உறுதி என்ற நிலையில் சென்னை களமிறங்கியது.

போட்டியின் 3வது நிமிடம் குயரோ கொடுத்த பந்தை பெற்ற ரோலண்டு கோல் அடிக்க, தமிழக ரசிகர்கள் துவக்கத்திலேயே அதிர்ச்சி அடைந்தனர். சென்னை வீரர் மான்ஜி பலமுறை முயற்சித்த போது கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதியில் சென்னை 0–1 என பின்தங்கியது.

திடீர் எழுச்சி

இரண்டாவது பாதியில் சென்னை வீரர்கள் எழுச்சி பெற்றனர். உள்ளூர் ரசிகர்கள் மேள தாளத்துடன் உற்சாகம் தர அடுத்தடுத்து பஞ்சாப் கோல் ஏரியாவை முற்றுகையிட்டனர். போட்டியின் 55வது நிமிடத்தில் பஞ்சாப்பின் ஆகாஷ்தீப் சிங் கையில் பந்து பட, சென்னைக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதை வீணாக்காமல் அப்படியே கோலாக மாற்றினார் மான்ஜி. ஸ்கோர் 1–1 என சமன் ஆனது. இத்தொடரில் இவர் அடித்த 21வது கோல் (4 ‘ஹாட்ரிக்’) இது.

சபாஸ் போரா

போட்டியின் 69வது நிமிடத்தில் ரோட்ரிக்சிடம் இருந்து பந்தை பெற்ற போரா, தன் பங்கிற்கு ஒரு கோல் அடிக்க சென்னை அணி 2–1 என முன்னிலை பெற்றது. ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+3வது) சென்னை அணிக்கு ‘கார்னர் கிக்’ கிடைத்தது.

மீண்டும் ரோட்ரிக்ஸ் ‘கால்’ கொடுக்க, பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார் போரா. முடிவில் சென்னை அணி 3–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. மொத்தம் 43 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடம் பிடித்து, முதன் முறையாக சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றது. சிறந்த வீரராக போரா தேர்வு செய்யப்பட்டார்.

 

ஒரே ஒரு புள்ளி

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணி, கேரளாவை 2–1 என வீழ்த்தியது. 42 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெற்றது. ஒரு புள்ளி முன்னிலை பெற்ற சென்னை அணி (43 புள்ளி) கோப்பையை தட்டிச் சென்றது.

 

‘டாப்–5’ யார்

‘ஐ–லீக்’ தொடரில் ‘டாப்–5’ இடம் பெற்ற அணிகள் விவரம்

அணி            போட்டி வெற்றி    தோல்வி    ‘டிரா’     புள்ளி

சென்னை                  20              13             4              3         43

ஈஸ்ட் பெங்கால்  20              13             3                 4         42

காஷ்மீர்                  19              10             6                 3         36

சர்ச்சில் பிரதர்ஸ்  20                9             7                 4         34

மோகன் பகான்  20                8             5                 7           29

* காஷ்மீர், பஞ்சாப் போட்டி பாதுகாப்பு காரணத்தால் நடக்கவில்லை. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?