Advertisement


கடைசி வினாடியில் கலக்கல்: வடகிழக்கு அணி வெற்றி

மார்ச் 07, 2019 22:29
 Comments  
 


north east soccer team, isl, Bengaluru fc
 

கவுகாத்தி: பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் அரையிறுதி முதல் சுற்றுப்போட்டியில் கடைசி கட்டத்தில் மாசியா கோல் அடிக்க வடகிழக்கு யுனைடெட் அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.

இந்தியாவில் நடக்கும் 5வது ஐ.எஸ்.எல்., (இந்தியன் சூப்பர் லீக் ) கால்பந்து ‘சீசன்’ இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்த முதல் அரையிறுதி முதல் சுற்றுப்போட்டியில் பெங்களூரு, வட கிழக்கு யுனைடெட் அணிகள் மோதின.

சொந்த மண்ணில் துவக்கம் முதலே வடகிழக்கு அணியினர் ஆதிக்கம் செலுத்தினர். 20வது நிமிடத்தில் வடகிழக்கு வீரர் ஓபெகே தந்த ‘பாசை’ ரிடீம் டிலாங் பெற்றார். எதிரணியினர் வியூகத்தை தகர்த்த இவர், அப்படியே பந்தை உதைக்க கச்சிதமாக வலைக்குள் சென்றது. முதல் கோல் கிடைத்த மகிழ்ச்சியில் சொந்த மண் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முதல் பாதி முடிவில் வடகிழக்கு அணி 1–0 என முன்னிலை பெற்றது.

கடைசி கட்ட கோல்

58வது நிமிடத்தில் எதிரணி கோல்போஸ்ட் அருகே பெங்களூரு கேப்டன் செத்ரி அசாத்தியமாக பந்தை கொண்டு சென்றார். ஆனால், எதிரணியின் ரீகன் சிங் விதியை மீறி செத்ரியை நகரவிடாமல் மடக்கினார். வீரர்கள் அருகே ‘ ரெப்ரியும்’ இல்லாததால், ஆக்ரோஷம் அடைந்தார் செத்ரி. இதற்கு, 82வது நிமிடத்தில் செத்ரிக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இவர் தந்த பந்தை பெற்ற சக வீரர் சிஸ்கோ கோலாக்க, பெங்களூரு நிம்மதி அடைந்தது.

ஆனால், போட்டி முடிய 10 வினாடி இருந்த நேரத்தில், பெங்களூரு வீரர் காப்ரா செய்த தவறால் வடகிழக்கு அணிக்கு ‘பெனால்டி’ கிடைத்தது. இதில் மாசியா கோல் அடித்து அசத்தினார். முடிவில், வடகிழக்கு யுனைடெட் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?