Advertisement


சிரிப்பு போதும்..: இது ஷரபோவா ‘பாலிசி’

மார்ச் 03, 2019 21:47
 Comments  
 


sharapova, tennis, russia
 

 ‘‘சொகுசு கப்பல் வாங்கும் எண்ணம் இல்லை. சிரித்தாலே போதும் மனதில் மகிழ்ச்சி உண்டாகும்,’’ என, ரஷ்ய வீராங்கனை ஷரபோவா கூறினார். 

ரஷ்ய டென்னிஸ் நட்சத்திரம் மரியா ஷரபோவா, 31. ‘கேரியர்’ கிராண்ட்ஸ்லாம் வென்ற (4 கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் பட்டம்) ஒரே ரஷ்ய வீராங்கனை என்ற பெருமை பெற்றவர். அழகான தோற்றம் கொண்ட இவருக்கு களத்திலும், வெளியிலும் ரசிகர்கள் அதிகம். போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் அதிக வருமானம் பெறும் விளையாட்டு வீராங்கனை பட்டியலில் இடம் பிடித்தவர்.

ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் பெடரர் போன்ற டென்னிஸ் வீரர்கள் தங்களது சொந்தமான சொகுசுகப்பலில் போட்டி இல்லாத நேரத்தை செலவழிக்கின்றனர். ஆனால், ஷரபோவா மட்டும் வேறு மாதிரியாக இருக்கிறார். கடந்த 2015ல் முன்னாள் காதலர் டிமிட்ரிவுடன் (பல்கேரியா) எவ்வித பந்தாவும் இல்லாமல் வீதியில் உலா வந்தார். 

இது குறித்து ஷரபோவா கூறியது: அதிகமான பிரபலங்கள் தங்களின் பணத்தை சொகுசுக்கப்பலை வாங்குவதில் முதலீடு செய்கின்றனர். நான் சொகுசுக்கப்பலின் ரசிகை இல்லை. இதில் பொழுதை போக்கும் எண்ணமும் கிடையாது. எனக்கு நிலத்தில் வாழ்வதற்குத்தான் விருப்பம். நன்றாக சிரித்தாலே, மனம் முழுவதும் மகிழ்ச்சி உண்டாகும். இதற்கு எவ்வித செலவும் தேவை இல்லை. 

முதல் கார்

முதல் முதலாக எனக்கு கிடைத்த கார் எனது பணத்தால் வாங்கவில்லை. ‘ஸ்பான்சர்’ மூலம் கிடைத்தது. எனது குடும்பத்தினருக்காக ஹோண்டா கார் வாங்கினேன். அதிலிருந்த வசதிகளை பார்த்து வியந்துபோனேன். தற்போது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கிறேன். இங்கு குளிர் வாட்டி வதைக்கிறது. சூடான பானத்தை மட்டும் குடித்து வருகிறேன். ‘கிரீன் டீ’ குடிப்பது வித்தியாசமான உணர்வை தருகிறது. இவ்வாறு ஷரபோவா கூறினார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?