Advertisement


தங்க கோப்பை கால்பந்து: இந்தியா அதிர்ச்சி

பிப்ரவரி 12, 2019 22:11
 Comments  
 


Gold Cup football Sabitra Bhandari scores a brace to set up Nepal 2 1 win over India
 

 புவனேஷ்வர்: பெண்களுக்கான தங்க கோப்பை கால்பந்து லீக் போட்டியில் இந்திய அணி, 1–2 என நேபாளத்திடம் தோல்வியடைந்தது.

ஒடிசாவின் புவனேஸ்வரில் பெண்களுக்கான தங்க கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இந்தியா, நேபாளம், ஈரான், மியான்மர் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இந்திய அணி, ஈரானை வென்றது.

இரண்டாவது போட்டியில் இந்திய அணி, நேபாளத்தை சந்தித்தது. போட்டி துவங்கிய 5 வது நிமிடத்தில் நேபாளத்தின் சபரிதா முதல் கோல் அடித்தார். தொடர்ந்து மிரட்டிய இவர் அடுத்த இரண்டாவது நிமிடம் (7வது) மற்றொரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 0–2 என பின் தங்கியது.

இரண்டாவது பாதியில் 84வது நிமிடம் இந்தியாவின் ரத்தன்பாலா தேவி ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார். முடிவில் இந்திய அணி 1–2 என்ற கணக்கில் வீழ்ந்தது. இன்று நடக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியில் மியான்மரை வெல்லும் பட்சத்தில் பைனலுக்கு முன்னேறலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?