Advertisement


இரானி கோப்பை: விஹாரி சதம்

பிப்ரவரி 12, 2019 21:13
 Comments  
 


Hanuma Vihari, Irani Cup
 

நாக்பூர்: விதர்பா அணிக்கு எதிரான இரானி கோப்பை போட்டியில் ஹனுமா விஹாரி சதம் அடிக்க ரெஸ்ட் ஆப் இந்தியா முதல் இன்னிங்சில் 330 ரன்கள் எடுத்தது.

ரஞ்சி கோப்பை ‘நடப்பு சாம்பியன்’ விதர்பா, ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இரானி கோப்பை போட்டியில் பங்கேற்கின்றன. இப்போட்டி (ஐந்து நாள்) மகாராஷ்டிராவின் நாக்பூரில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார்.

மயங்க் அரை சதம்

ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு அன்மோல்பிரீத் (15) ஏமாற்றினார். பின் இணைந்த மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி அசத்தினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் சேர்த்தபோது, அரை சதம் கடந்த மயங்க் அகர்வால் (95) ஆட்டமிழந்தார். கேப்டன் ரகானே (13), ஸ்ரேயாஸ் ஐயர் (19) ஜொலிக்கவில்லை.

அக்சர் வாக்கரே பந்துவீச்சில் இஷான் கிஷான் (2), கிருஷ்ணப்பா கவுதம் (7) ஒற்றை இலக்கில் ஆட்டமிழந்தனர். நம்பிக்கையுடன் விளையாடிய விஹாரி (114) சதம் எட்டினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில், ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 330 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. விதர்பா சார்பில் அதிகபட்சமாக சர்வாட்டே, வாக்கரே தலா 3 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?