Advertisement


மான்ஜி ‘ஹாட்ரிக்’: சென்னை ‘டிரா’ * ஐ–லீக் கால்பந்தில் ஏமாற்றம்

பிப்ரவரி 11, 2019 22:32
 Comments  
 


i league football, india, chennai city draw
 

 இம்பால்: ‘ஐ–லீக்’ தொடரில் சென்னை சிட்டி, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய லீக் போட்டி 3–3 என்ற கணக்கில் ‘டிரா’ ஆனது. சென்னை வீரர் பெட்ரோ மான்ஜி ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார்.

இந்தியாவின் உள்ளூர் கால்பந்து தொடர் ‘ஐ–லீக்’. 11 அணிகள் மோதும் இந்த சீசனுக்கான போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன. சென்னை சிட்டி அணி தனது 16வது லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணியை சந்தித்தது. 35வது நிமிடத்தில் சக வீரர் கார்டில்லோ தந்த பந்தை பெற்ற சென்னை வீரர் பெட்ரோ மான்ஜி, முதல் கோல் அடித்தார்.

அடுத்து 42வது நிமிடம் இரண்டாவது கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர் முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+1வது) ரீகன் தந்த ‘பாசை’ வாங்கி கோலாக மாற்றி, ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். முதல் பாதியில் சென்னை அணி 3–0 என்ற கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் வடகிழக்கு அணி எழுச்சி பெற்றது. சிடி (52வது), சென்சோ (68வது), சீரான இடைவெளியில் கோல் அடித்து மிரட்டினர். தொடர்ந்து 87வது நிமிடம் வடகிழக்கு அணி வீரர் வில்லியம்சன் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.

முடிவில் இப்போட்டி 3–3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. சென்னை அணி வெற்றி வாய்பை நழுவவிட்டது.

முதலிடம் யாருக்கு

இத்தொடரில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்–1’ இடம் பெறும் அணிக்கு சாம்பியன் கோப்பை கிடைக்கும். தற்போது 16 போட்டியில் சென்னை அணி 34 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. காஷ்மீர் (32), சர்ச்சில் பிரதர்ஸ் (30) அடுத்த இரு இடத்தில் உள்ளன. மீதமுள்ள மூன்று போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சென்னை சிட்டி அணி முதன் முதலாக ஐ–லீக் கோப்பை வென்று அசத்தலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?