Advertisement


‘நினைத்தாலே இனிக்கும்...’ * நான்கு மாதம்... நான்கு கோப்பை

பிப்ரவரி 11, 2019 22:30
 Comments  
 


india tour of australia, new zealand
 

புதுடில்லி: கோஹ்லி தலைமையிலான இந்திய அணி கடந்த நான்கு மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நான்கு கோப்பைகள் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இது இந்திய அணிக்கு மறக்க முடியாத தொடர்களாக அமைந்தன.

கடந்த 2018 ல் தென் ஆப்ரிக்க தொடருக்கு முன் ‘அடுத்த 15 மாதத்தில் இந்திய அணி சிறப்பானதாக மாறும்,’ என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தார். மாறாக தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து மண்ணில் கோஹ்லி சிறப்பாக செயல்பட்ட போதும் இந்தியா தோல்வியடைய விமர்சனங்கள் எழுந்தன.

பின் பெரும் எதிர்பார்ப்புடன் ஆஸ்திரேலியா சென்றது இந்தியா. இங்கு ‘டுவென்டி–20’ தொடரில் கோப்பை பகிர்ந்து (1–1) கொண்டது. டெஸ்ட் தொடரில் இம்முறை கோஹ்லிக்கு கைகொடுத்தார் புஜாரா. மெல்போர்ன் டெஸ்டில் 481 நிமிடங்கள் களத்தில் இருந்து 319 பந்துகளை சந்தித்து இவர் எடுத்த 106 ரன்கள் தான் இந்தியா தொடரில் ஆதிக்கம் செலுத்த கைகொடுத்தது.

தவிர மயங்க் அகர்வால், விஹாரி ஜோடியின் சிறப்பான துவக்கம், பவுலிங்கில் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா ‘வேகம்’, குல்தீப், ஜடேஜாவின் ‘சுழல்’ என எல்லாம் சேர்ந்து கொள்ள ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடர் வென்ற முதல் ஆசிய அணியானது இந்தியா (2–1).

ஒருநாள் கலக்கல்

மீண்டும் மிரட்டிய இந்தியா, ஆஸ்திரேலியாவில் 2–1, நியூசிலாந்தில் 4–1 என இரண்டு ஒருநாள் தொடர்களையும் கைப்பற்றியது. உலக கோப்பை தொடர் வரவுள்ள நிலையில் தோனி இன்னும் நம்பிக்கையான பேட்ஸ்மேன் தானா, குல்தீப், சகால் கூட்டணி துருப்பு சீட்டாக இருப்பார்களா, பேட்டிங் ஆர்டரில் 3, 4, 5, 6 அல்லது 7 வது இடத்தில் யார் யாரை களமிறக்கலாம், இக்கட்டான நிலையில் இருந்து மீண்டு வெற்றி பெற முடியுமா என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடையை இத்தொடர்கள் தந்தன.

தோனி நம்பிக்கை

தோனியை பொறுத்தவரையில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பராக உள்ளார். அணியின் பீல்டிங் கேப்டனாக செயல்படுகிறார். இக்கட்டான நேரங்களில் ஆலோசனை தருகிறார். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இவரது ‘ஐடியா’ பெரிதும் கைகொடுக்கிறது.

பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவில் ‘ஹாட்ரிக்’ அரைசதம் அடித்த தோனி, உலக கோப்பையில் எந்த இடத்தில் களமிறங்குவார் என்பது தான் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. கோஹ்லி 4வது இடத்தில் வர விரும்புவதால் தோனிக்கு 5வது இடம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.

தொடருமா ஆதிக்கம்

கேதர் ஜாதவ், அம்பதி ராயுடு, ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் கடந்த இரு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். நியூசிலாந்தில் ‘டுவென்டி–20’ தொடரை 1–2 என இழந்த போதும் ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் எதிர்பார்த்ததை விட கலக்கலாக இந்திய அணி செயல்பட்டது. இது தொடரும் பட்சத்தில் கடந்த 1970–80 களில் விண்டீஸ், 1990–2000ல் ஆஸ்திரேலியா உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது போல இந்தியாவும் ஆதிக்கம் செலுத்தலாம்.

 

1

ஆஸ்திரேலிய மண்ணில் முதன் முறையாக டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா (2–1). கடந்த 71 ஆண்டுகளில் 32 முறை ஆசிய அணிகள் பயணம் செய்தன. இதில் டெஸ்ட் தொடர் கைப்பற்றிய முதல் ஆசிய அணி என்ற பெருமை பெற்றது இந்தியா.

 

4–1

நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை 4–1 என இந்தியா வென்றது. இம்மண்ணில் இந்தியா பெற்ற மிகப்பெரிய வெற்றிகளில் இது தான் ‘டாப்’.

 

25.90

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய பவுலர்களின் சராசரி 25.90. இது ஆசிய அணிகளில் சிறந்த சராசரியாக அமைந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?