Advertisement


தேர்வுக்குழு தலைவர் மீது தாக்குதல்: அணியில் சேர்க்காததால் ஆவேசம்

பிப்ரவரி 11, 2019 21:07
 Comments [1]  
 


Amit Bandari, Delhi Cricket Selection Committee Chairman, Assaulted, Anuj Dedha
 

புதுடில்லி: உத்தேச அணியில் சேர்க்காததால் ஆத்திரமடைந்த இளம் வீரர், தேர்வுக்குழு தலைவர் அமித் பண்டாரி மீது அடியாட்களை வைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தினார்.

தேசிய ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடரான சையது முஷ்தாக் அலி டிராபி வரும் பிப். 21ல் துவங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள டில்லி அணியினருக்கான பயிற்சி போட்டி செயின்ட் ஸ்டீபன் மைதானத்தில் நடந்தது. அப்போது மைதானத்தில் இருந்த டில்லி அணி தேர்வுக்குழு தலைவர் அமித் பண்டாரி மீது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் ஹாக்கி மட்டை, கம்பியை கொண்டு பலமாக தாக்கினர். பண்டாரியை காப்பாற்ற முயன்ற வீரர்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மர்ம நபர்கள் மிரட்டினர். இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீஸ் வருவதற்குள், அந்த நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். தலை மற்றும் காதுப் பகுதியில் காயமடைந்த பண்டாரியை, சக தேர்வுக்குழு உறுப்பினர் சுக்விந்தர் சிங், வீரர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு ஆபத்து இல்லை எனக் கூறப்படுகிறது.

காரணம் என்ன: முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளரான அமித் பண்டாரியை தாக்கியதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 23 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்கான 79 பேர் கொண்ட டில்லி உத்தேச அணி அறிவிக்கப்பட்டது. இதில் இளம் வீரர் அனுஜ் தேதா பெயர் இடம் பெறவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அனுஜ், இந்த கொடூர செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

காம்பிர் காட்டம்

இச்சம்பவம் டில்லி கிரிக்கெட்டில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து முன்னாள் டில்லி அணி வீரர் கவுதம் காம்பிர் கூறுகையில், ‘‘இதுபோன்ற மோசமான செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும், அவருக்கு வாழ்நாள் தடை அளிக்கப்பட வேண்டும். அவர், வேறு எந்த ஒரு கிரிக்கெட் சங்கத்திலும் விளையாட முடியாத அளவுக்கு தண்டனை வழங்க வேண்டும்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Ramasami Venkatesan one week ago | Report abuse
இப்படிப்பட்டவர்களின் கிரிக்கெட் கனவையே தகர்க்கும்படியான ஒரு தண்டனை கொடுக்கப்படவேண்டும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?