Advertisement


இங்கிலாந்து அபார பந்துவீச்சு

பிப்ரவரி 11, 2019 18:43
 Comments  
 


West Indies, England, 3rd Test Cricket, Mark Wood
 

கிராஸ் ஐலெட்: மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து பவுலர்கள் அசத்த, முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்னுக்கு சுருண்டது.

வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் கிராஸ் ஐலெட்டில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் எடுத்தது. பின் முதல் இன்னிங்சை துவக்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மொயீன் அலி தொல்லை தந்தார். இவரது ‘சுழலில்’ கேப்டன் கிராய்க் பிராத்வைட் (12), ஜான் கேம்ப்பெல் (41) சிக்கினர். மார்க் உட் ‘வேகத்தில்’ ஷாய் ஹோப் (1), டேரன் பிராவோ (6), ராஸ்டன் சேஸ் (0), ஷிம்ரான் ஹெட்மையர் (8) அவுட்டாகினர். ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஷேன் டவ்ரிச் (38) ஆட்டமிழந்தார். மொயீன் அலி பந்தில் கீமோ பால் (8), அல்ஜாரி ஜோசப் (2) சரணடைந்தனர். ஷனான் கேப்ரியல் (4), மார்க் உட் பந்தில் வெளியேறினர்.

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ரன்னுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. கீமர் ரோச் (16) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் மார்க் உட் 5, மொயீன் அலி 4 விக்கெட் கைப்பற்றினர்.

பின், 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து அணி 2ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்து, 142 ரன் முன்னிலை வகித்திருந்தது. ரோரி பர்ன்ஸ் (10), ஜென்னிங்ஸ் (8) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?