Advertisement


பங்கஜ் அத்வானி சாம்பியன்

பிப்ரவரி 10, 2019 22:25
 Comments  
 


Pankaj Advani, National Snooker, Champion
 

இந்துார்: சீனியர் ஸ்னுாக்கர் தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில் 6–0 என, லட்சுமண் ரவாத்தை தோற்கடித்தார்.

இந்துாரில், 86வது சீனியர் ஸ்னுாக்கர் தேசிய சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, லட்சுமண் ரவாத் மோதினர். அபாரமாக ஆடிய பங்கஜ் அத்வானி 6–0 (70–36, 91–22, 66–06, 65–51, 77–49, 59–18) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

இது, பங்கஜ் அத்வானி வென்ற 9வது தேசிய ஸ்னுாக்கர் பட்டம். தவிர இவர், இதுவரை 32 தேசிய பட்டம் (ஜூனியர் பிரிவில் 11 + பில்லியர்ட்ஸ் 9 + ‘சிக்ஸ்–ரெட்’ ஸ்னுாக்கர் 3 + ஸ்னுாக்கர் 9) வென்றுள்ளார். சர்வதேச அரங்கில் ஸ்னுாக்கர், பில்லியர்ட்ஸ் சேர்த்து இதுவரை 21 உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?