Advertisement


இந்தியா ‘ஏ’ அணி ‘டிரா’

பிப்ரவரி 10, 2019 19:42
 Comments  
 


India A, England Lions, Unofficial Test, Cricket, Draw
 

வயநாடு: இந்தியா ‘ஏ’, இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் மோதிய அதிகாரப்பூர்வமற்ற முதலாவது டெஸ்ட் போட்டி ‘டிரா’ ஆனது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ‘ஏ’ அணியுடன் விளையாடுகிறது. முதல் போட்டி கேரள மாநிலம் வயநாடுவில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து லயன்ஸ் 340, இந்தியா ‘ஏ’ 540/6 (‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் இங்கிலாந்து லயன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன் எடுத்திருந்தது. ஹோல்டன் (9), டக்கெட் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து லயன்ஸ் அணியின் மேக்ஸ் ஹோல்டன் (29), பென் டக்கெட் (30) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய சாம் ஹெய்ன் (57), போப் (63) அரைசதம் கடந்தனர். கேப்டன் சாம் பில்லிங்ஸ் (5) ஏமாற்றினார்.

கடைசி நாள் ஆட்டநேர முடிவில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 5 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து போட்டி ‘டிரா’ என அறிவிக்கப்பட்டது. ஸ்டீவன் முல்லானி (3), வில் ஜாக்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தனர். அன்கித் பாவ்னே தலைமையிலான இந்தியா ‘ஏ’ அணி சார்பில் ஜலஜ் சாக்சேனா, ஷபாஸ் நதீம் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இரண்டாவது டெஸ்ட், வரும் பிப். 13ல் வயநாடுவில் துவங்குகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?