Advertisement


தேசிய ஹாக்கி: ரயில்வே சாம்பியன்

பிப்ரவரி 10, 2019 19:32
 Comments  
 


Senior National Hockey Championship, Railway, Champion, Punjab, Runner Up
 

குவாலியர்: சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் பைனலில் ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில் 3–2 என, ‘நடப்பு சாம்பியன்’ பஞ்சாப் அணியை தோற்கடித்தது.

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் நகரில், 9வது ஆண்கள் சீனியர் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் (‘ஏ’ டிவிசன்) தொடர் நடந்தது. இதன் பைனலில் ரயில்வே, ‘நடப்பு சாம்பியன்’ பஞ்சாப் அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய ரயில்வே அணி 3–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரயில்வே அணிக்கு ஹர்சாஹிப் சிங் (35, 45வது நிமிடம்), தில்பிரீத் சிங் (57வது) கைகொடுத்தனர். பஞ்சாப் அணி சார்பில் ருபிந்தர் பால் சிங் (23வது நிமிடம்), ராமன்தீப் சிங் (60வது) தலா ஒரு கோலடித்து ஆறுதல் தந்தனர்.

பெட்ரோலிய அணி வெண்கலம்

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ்.பி.பி.,) அணி 4–1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்–சிந்து வங்கி அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது. பி.எஸ்.பி.பி., அணி சார்பில் தல்விந்தர் சிங் (8வது நிமிடம்), தேவிந்தர் வால்மிகி (13வது), ஹர்மன்பிரீத் சிங் (49வது), மன்தீப் சிங் (57வது) தலா ஒரு கோலடித்து கைகொடுத்தனர். பஞ்சாப்–சிந்து வங்கி அணிக்கு ககன்பிரீத் சிங் (51வது நிமிடம்) ஆறுதல் தந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?