Advertisement


கால்பந்து வீரர் உடல் மீட்பு

பிப்ரவரி 09, 2019 22:51
 Comments  
 


Emiliano Sala Confirmed Dead After Plane Crash
 

 லண்டன்: விமான விபத்தில் சிக்கி மரணம் அடைந்த அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா உடல் மீட்கப்பட்டது.

அர்ஜென்டினா அணியின் கால்பந்து வீரர் எமியானோ சலா 28. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடினார். இங்கிலாந்தின் வேல்ஸ் கிளப் ரூ. 138 கோடிக்கு இவரை ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தம் முடிந்த இரண்டாவது நாள் (ஜன. 21) தனி விமானத்தில் வேல்ஸ் திரும்பினார். சலா, விமானி டேவிட் இபோஸ்டன், 59 என இருவர் மட்டும் பயணம் செய்தனர். 

கியர்ன்சே என்ற தீவின் வடக்குப் பகுதிக்கு அருகே வந்த போது விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தீவிர தேடலுக்குப்பின் சலா சென்ற விமானத்தின் சேதமடைந்த பாகங்கள், மற்றும் இடிபாடுகளுக்கு இடையே கியர்ன்சே தீவுக்கு அருகில் கடலுக்கு அடியில் 67 மீ., ஆழத்தில் சேதமடைந்த விமானத்தில் பாகங்கள் மற்றும் ஒரு உடல் மட்டும் கிடப்பது உறுதியானது. தற்போது இந்த உடலை மீட்டனர். இது கால்பந்து வீரர் சலா தான் என்பதை போலீசார் உறுதி செய்தனர். விமானி இபோஸ்டன் உடல் கிடைக்கவில்லை. சலாவுக்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். 

இதனிடையே சலாவை கவுரவிக்கும் வகையில் நான்டஸ் அணியில், இவர் அணிந்து விளையாடிய ‘ஜெர்சி’ எண் 9க்கு நிர்வாகத்தினர் ஓய்வு அறிவித்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?