மனாமா: பஹ்ரைனில் நடக்கும் ஜூனியர் டேபிள் டென்னிசில் இந்தியாவின் அனார்க்யா, சுஹானா ஜோடி தங்கம் கைப்பற்றியது.
பஹ்ரைனில் ஜூனியர் மற்றும் பல்வேறு பிரிவுகளில் டேபிள் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ‘கேடட்’ இரட்டையர் பிரிவு பைனலில் இரு இந்திய அணிகள் மோதின. முதலில் ஒற்றையர் போட்டிகள் நடந்தன. இதில் அனார்க்யா 3–0 (11–8, 11–9, 11–3) என யாஷஸ்வினியை வென்றார். சுஹானா 3–1 என காவ்ய ஸ்ரீயை வீழ்த்தினார்.பின் நடந்த இரட்டையரில் அனார்க்யா, சுஹானா ஜோடி 3–2 என வெற்றி பெற்றது. முடிவில் 3–0 என்ற கணக்கில் சாதித்து தங்கம் கைப்பற்றினர். யாஷஸ்வினி, காவ்ய ஸ்ரீக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது. இதுவரை இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என நான்கு பதக்கங்கள் வென்றுள்ளது.