Advertisement


சாகிப் அல் ஹசன் விலகல்

பிப்ரவரி 09, 2019 15:54
 Comments  
 


Shakib Al Hasan, Bangladesh Cricketer, New Zealand ODI Series, Ruled Out, Finger Fracture
 

தாகா: வங்கதேச வீரர் சாகிப் அல் ஹசன், காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார்.

நியூசிலாந்து செல்லும் வங்கதேச அணி, 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி வரும் பிப். 13ல் நேப்பியரில் நடக்கவுள்ளது. மீதமுள்ள போட்டிகள் கிறைஸ்ட்சர்ச் (பிப். 16), டுனிடின் (பிப். 20) நகரங்களில் நடக்கவுள்ளன.

இத்தொடருக்கான வங்கதேச அணியில் இருந்து ‘ஆல்–ரவுண்டர்’ சாகிப் அல் ஹசன் விலகினார். சமீபத்தில் தாகாவில் நடந்த வங்கதேச பிரிமியர் லீக் தொடருக்கான பைனலில் ‘பேட்டிங்’ செய்த போது இவரது இடது கை மோதிர விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் இவர், மூன்று வாரம் வரை ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் டஸ்கின் அகமது, காயத்தால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகினார். தற்போது சாகிப் விலகியது பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?