Advertisement


குன்னேஸ்வரன், சசிகுமார் தோல்வி

பிப்ரவரி 09, 2019 15:09
 Comments  
 


ATP Challenger Tennis, Prajnesh Gunneswaran, Sasi Kumar Mukund
 

சென்னை: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், சசிகுமார் முகுந்த் தோல்வியடைந்தனர்.

சென்னையில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ ஹாரிஸ் மோதினர். முதல் செட்டை 4–6 என இழந்த குன்னேஸ்வரன், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6–3 எனக் கைப்பற்றி பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் சொதப்பிய இவர், 0–6 எனக் கோட்டைவிட்டார். முடிவில் குன்னேஸ்வரன் 4–6, 6–3, 0–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், பிரான்சின் கோரன்டின் மவுடட் மோதினர். இதில் சசிகுமார் 6–3, 4–6, 2–6 என்ற கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?