Advertisement


சிந்துவுக்கு ரூ. 50 கோடி

பிப்ரவரி 08, 2019 21:03
 Comments [6]  
 


Sindhu signs approx 50 crore deal with Li Ning
 

புதுடில்லி: இந்திய பாட்மின்டன் வீராங்கனை சிந்துவை ரூ. 50 கோடிக்கு சீனாவை சேர்ந்த ‘ஷூ’ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்திய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து 23. ஒலிம்பிக்கில் (2016, ரியோ டி ஜெனிரோ) வெள்ளிப்பதக்கம் வென்றவர். அடுத்தடுத்து சாதித்து வருவதால் விளம்பரத்துறையில் கொடிகட்டி பறக்கிறார். இதற்கிடையே, சீனாவை சேர்ந்த லீ நிங் என்ற ‘ஷூ’ நிறுவனம் சிந்துவை ரூ. 50 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுக்கு இந்நிறுவனத்துடன் இவர் இணைந்து செயல்பட உள்ளார்.

சன்லைட் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிட்., இயக்குனர் மகேந்தர் கபூர் கூறுகையில்,‘‘ லீ நிங் நிறுவனத்துடன் சிந்து ஒப்பந்தம் செய்திருப்பது பாட்மின்டன் அரங்கில் மிகப்பெரியது. ‘ஸ்பான்சர்ஷிப்’ அடிப்படையில் ரூ. 40 கோடி இவர் பெறுவார். மீதமுள்ள ரூ. 10 கோடி இவரது விளையாட்டு உபகரணம் மூலம் கிடைக்கும்,’’ என்றார்.

கோஹ்லியை எட்டினார்

கடந்த 2017ல் பூமா ‘ஷூ’ நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லியை ரூ. 100 கோடிக்கு (8 ஆண்டு) ஒப்பந்தம் செய்தது. ஒரு ஆண்டுக்கு ரூ. 12.5 கோடி கோஹ்லி பெறுவார். இதன் அடிப்படையில், தற்போது கோஹ்லியை ஒப்பந்த மதிப்பின் மூலம் சிந்து எட்டியுள்ளார். லீ நிங் 2014–15ம் ஆண்டிற்குப்பின் சிந்துவை இரண்டாவது முறையாக ஒப்பந்தம் செய்துள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்



//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Raja sridhar 6 days ago | Report abuse
The person who win the gold in olympics Mr. Mariappan have not got anything. We have to encourage all the games in equal manner.


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Jeevanantham 6 days ago | Report abuse
நல்ல சம்பாத்தியம், கொஞ்ச உங்க சொந்த ஊருக்கு கொஞ்சம் செலவு பண்ணுங்க.


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
ARUMUGAVELAN 6 days ago | Report abuse
ஆமா , இவ்வளவு பணத்திற்கு என்ன வேலை செய்யணும் என்று தெரியவில்லையே , அதையும் கொஞ்சம் சொல்லுங்க


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
GANESAN SHANMUGAM 6 days ago | Report abuse
எங்கே ஒரு சீன விளையாட்டு வீரரை நம் இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் பண்ண சொல்லுங்கள் பாக்கலாம் வரமாட்டார்கள், நம் இந்திய கிரிக்கெட் அணியும் பணத்தை வாங்கி கொண்டு oppo க்கு விளம்பரம் தேடு கிறார்கள் தர்போது சிந்து வாழ்க வாழ்க இந்த சினிமாக்காரர் களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் எவளோ பணம் வந்தாலும் பத்தாது போல


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Kolai Veri 6 days ago | Report abuse
வாழ்த்துக்கள் சிந்து


//stat.dinamalar.com/new/sports/images/avatar.gif
0   0  
Dr.subbanarasu Divakaran 6 days ago | Report abuse
நல்லது than




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?