Advertisement


பெடரேஷன் கோப்பை: இந்தியா தோல்வி

பிப்ரவரி 08, 2019 18:39
 Comments  
 


Fed Cup Tennis, India, Kazakhstan
 

அஸ்தானா: பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய பெண்கள் அணி 0–3 என, கஜகஸ்தானிடம் வீழ்ந்தது.

கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில், பெண்களுக்கான பெடரேஷன் கோப்பை டென்னிஸ், ‘ஆசிய ஓசியானியா குரூப்–1’ சுற்றின் ‘ஏ’ பிரிவு போட்டியில் இந்தியா, கஜகஸ்தான் அணிகள் மோதின. இதன் முதல் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் கர்மான் கவுர் தண்டி 3–6, 2–6 என, கஜகஸ்தானின் ஜரினா தியாசிடம் வீழ்ந்தார். இரண்டாவது போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா 1–6, 6–7 என, கஜகஸ்தானின் யுலியா புடின்ட்சேவாவிடம் தோல்வியடைந்தார்.

அடுத்து நடந்த இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரியா பாட்யா, பிரார்த்தனா தாம்ப்ரே ஜோடி 1–6, 1–6 என, கஜகஸ்தானின் அனா டேனிலினா, காலினா வோஸ்கோபோவா ஜோடியிடம் வீழ்ந்தது. முடிவில் இந்திய அணி 0–3 என, தோல்வியடைந்தது.

முதல் போட்டியில் தாய்லாந்தை வீழ்த்திய இந்திய அணி, ‘ஏ’ பிரிவில் 2வது இடம் பிடித்தது. இதனையடுத்து ‘ஆசிய–ஓசியானியா குரூப்–1’ சுற்றில் தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டது. இன்று நடக்கவுள்ள 3–4வது இடத்துக்கான போட்டியில் இந்திய அணி, ‘பி’ பிரிவில் 2வது இடம் பிடித்த தென் கொரியாவை எதிர்கொள்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?