Advertisement


இந்திய டென்னிசிற்கு தடையா: டேவிஸ் கோப்பை தொடரில் சிக்கல்

பிப்ரவரி 07, 2019 22:13
 Comments  
 


Confident that Indian Davis Cup team will travel to Pakistan, bopanna
 

மும்பை: ‘‘டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்காக பாகிஸ்தான் செல்லவில்லை என்றால் இந்திய டென்னிசிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்படும் அபாயம் உள்ளது,’’ என ஏ.ஐ.டி.ஏ., பொதுச்செயலர் ஹிரோன்மாய் சாட்டர்ஜீ தெரிவித்தார். 

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் இத்தாலியிடம் வீழ்ந்த இந்திய அணி ‘ஆசிய–ஓசியானா குரூப்–1’ சுற்றுக்கு தள்ளப்பட்டது. வரும் செப்., 13–14ல் நடக்கும் இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. அட்டவணைப்படி இப்போட்டி பாகிஸ்தானில் நடத்த வேண்டும். ஆனால் 1964 மார்ச் மாதத்துக்குப் பின் இந்திய டேவிஸ் கோப்பை அணி இதுவரை பாகிஸ்தான் சென்றது இல்லை. தற்போதுள்ள பயங்கரவாத பிரச்னை சூழலில் இந்தியாவின் எந்த விளையாட்டு அணியும் அங்கு செல்வதில்லை. இதனால் வரும் போட்டியை பொதுவான இடத்தில் (லண்டன்) நடத்துவர் எனத் தெரிகிறது. ஏனெனில் இதற்கு முன் இரு அணிகள் மோதிய போட்டி 1973ல் மலேசியாவில் நடந்தது.

தடை விதிக்கப்படும்

இதுகுறித்து இந்திய டென்னிஸ் சங்க (ஏ.ஐ.டி.ஏ.,) செயலர் ஹிரோன்மாய் சாட்டர்ஜீ கூறியது: டேவிஸ் கோப்பை தொடருக்காக இந்தியா பாகிஸ்தான் செல்லவில்லை எனில் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்படலாம். இதைத் தவிர்க்க பாகிஸ்தான் செல்வதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன். சமீபத்தில் புவனேஷ்வரில் நடந்த உலக கோப்பை ஹாக்கி தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தான் செல்ல அனுமதி கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கில் கிரிக்கெட் கிடையாது என்பதால் சிக்கல் இல்லை. ஆனால், டென்னிஸ் ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ளது. தவிர டேவிஸ் கோப்பை என்பது டென்னிசின் உலக கோப்பை தொடர். சர்வதேச டென்னிஸ் சங்கம் எங்கு நடத்த வேண்டும் என முடிவு செய்கிறதோ, அங்கு சென்று தான் ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?