Advertisement


இரானி கோப்பை: ரகானே கேப்டன்

பிப்ரவரி 07, 2019 19:43
 Comments  
 


Irani Trophy, Cricket, Rahane, Rest Of India Squad
 

புதுடில்லி: இரானி கோப்பை போட்டிக்கான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி கேப்டனாக அஜின்கியா ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.

நாக்பூரில், வரும் பிப். 12–16ல் இரானி கோப்பை உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடக்கவுள்ளது. இதில் ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி, நடப்பு ரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா அணியை எதிர்கொள்கிறது. இதற்கான ‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி அறிவிக்கப்பட்டது. இதன் கேப்டனாக, இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டன் அஜின்கியா ரகானே நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி இடம் பிடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் முடிந்த விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை பைனலில் சதடித்த சவுராஷ்டிரா அணியின் ஸ்னெல் படேல், சுழலில் அசத்திய தர்மேந்திராசின் ஜடேஜா வாய்ப்பு பெற்றுள்ளனர்.

‘ரெஸ்ட் ஆப் இந்தியா’ அணி: அஜின்கியா ரகானே (கேப்டன்), மயாங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கவுதம், தர்மேந்திராசின் ஜடேஜா, ராகுல் சாகர், அன்கித் ராஜ்பூத், தன்வீர் உல்–ஹக், ரோனித் மோர், சந்தீப் வாரியர், ரிங்கு சிங், ஸ்னெல் படேல்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?