Advertisement


ரஞ்சி: விதர்பா மீண்டும் சாம்பியன்

பிப்ரவரி 07, 2019 15:01
 Comments  
 


Ranji Trophy Cricket, Vidarbha, Champion, Saurashtra, Runner Up
 

நாக்பூர்: ரஞ்சி கோப்பை தொடரில் விதர்பா அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 78 ரன் வித்தியாசத்தில் சவுராஷ்டிரா அணியை வென்றது.

நாக்பூரில் நடந்த ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் தொடருக்கான பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் விதர்பா 312, சவுராஷ்டிரா 307 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் விதர்பா அணி 200 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. பின், 206 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய சவுராஷ்டிரா அணி, 4ம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 58 ரன் எடுத்திருந்தது. விஷ்வராஜ் ஜடேஜா (23), காம்லேஷ் மக்வனா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த சவுராஷ்டிரா அணிக்கு காம்லேஷ் மக்வனா (14) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய விஷ்வராஜ் ஜடேஜா (52) அரைசதம் கடந்து ஆறுதல் தந்தார். அக்சய் வகாரே ‘சுழலில்’ பிரேரக் மன்கத் (2), தர்மேந்திராசின் ஜடேஜா (17) சிக்கினர். கேப்டன் ஜெயதேவ் உனத்கட் (7) நிலைக்கவில்லை.

இரண்டாவது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 127 ரன்னுக்கு சுருண்டது. சேட்டன் சகாரியா (2) அவுட்டாகாமல் இருந்தார். விதர்பா அணி சார்பில் ஆதித்யா சர்வாதே 6 விக்கெட் கைப்பற்றினார்.

ஆறாவது அணி

இதனையடுத்து விதர்பா அணி, தொடர்ந்து 2வது முறையாக (2017–18, 2018–19) ரஞ்சி கோப்பை வென்றது. இதன்மூலம் விதர்பா அணி, ரஞ்சி கோப்பை வரலாற்றில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்ட 6வது அணி என்ற பெருமை பெற்றது. ஏற்கனவே மும்பை, மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், டில்லி அணிகள் தொடர்ந்து 2 முறை கோப்பை வென்றிருந்தன.

சவுராஷ்டிரா அணி மூன்றாவது முறையாக (2012–13, 2015–16, 2018–19) பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்தது. இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட் (5+6) வீழ்த்திய விதர்பா அணியின் ஆதித்யா சர்வாதே ஆட்ட நாயகன் விருது வென்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?