Advertisement


முன்னிலை பெற்றது விதர்பா * ஸ்னெல் படேல் சதம்

பிப்ரவரி 05, 2019 20:46
 Comments  
 


ranji trophy final saurashtra vs vidarbha
 

 நாக்பூர்: ரஞ்சி கோப்பை பைனலில் விதர்பா அணி 60 ரன்கள் முன்னிலை பெற்றது. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 307 ரன்கள் எடுத்தது.

இந்தியாவின் முதல் தர உள்ளூர் தொடர் ரஞ்சி கோப்பை. இதன் பைனலில்‘நடப்பு சாம்பியன்’ விதர்பா, சவுராஷ்டிரா அணிகள்மோதுகின்றன. முதல் இன்னிங்சில் விதர்பா 312 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில்5 விக்கெட்டுக்கு 158 ரன்கள்எடுத்திருந்தது.

ஸ்னெல் சதம்

நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது.மன்கத் (21), மக்வானா (27) சீரான இடைவெளியில் திரும்பினர். ஸ்னெல் படேல் சதம் அடித்து அவுட்டானார். ஜடேஜா 23 ரன் எடுக்க, உனத்கட், சகரியா சிறப்பாக ரன்கள் சேர்த்தனர். 10வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த போது உனத்கட் (46) அரைசத வாய்ப்பை இழந்து திரும்பினார். சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 307 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சகரியா (28) அவுட்டாகாமல் இருந்தார்.

கிடைத்தது முன்னிலை 

முதல் இன்னிங்சில் கிடைத்த 5 ரன்கள் முன்னிலையுடன் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. பசல் (10), சஞ்சய் (16) விரைவில் திரும்பினர். மூன்றாவது நாள் முடிவில் விதர்பா அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 55 ரன்கள் எடுத்து 60 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கணேஷ் (24), வாசிம் ஜாபர் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?