Advertisement


கால்பந்து வீரர் உடல் கண்டெடுப்பு?

பிப்ரவரி 04, 2019 22:08
 Comments  
 


Emiliano Sala search Body seen in plane wreckage
 

லண்டன்: விமான பயணத்தில் தொலைந்து போன அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலா உடல் கடலுக்கு அடியில் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிகிறது. 

அர்ஜென்டினா அணியின் கால்பந்து வீரர் எமியானோ சலா 28. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடினார். இவரை இங்கிலாந்தின் வேல்ஸ் கிளப் ரூ. 138 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தம் முடிந்த இரண்டாவது நாள் தனி விமானத்தில் கடந்த ஜன. 21ம் தேதி வேல்ஸ் திரும்பினார்.

இதில் சலா, விமானி டேவிட் இப்போஸ்டன், 59 என இருவர் மட்டும் பயணம் செய்தனர்.  கியர்ன்சே என்ற தீவின் வடக்குப் பகுதிக்கு அருகே வந்த போது விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

விமானம் விபத்தில் சிக்கியதா, யாரும் கடத்திச் சென்றார்களா என்பது குறித்து தீவிர தேடல் நடந்தது. இதனிடையே சாலா சென்ற விமானத்தின் சேதமடைந்த பாகங்கள், கியர்ன்சே தீவுக்கு அருகில் கடலுக்கு அடியில் கிடப்பதை பிரிட்டிஷ் விசாரணையாளர்கள் உறுதி செய்யுள்ளனர். 

கடலுக்கு அடியில் சென்று தேடும் எந்திரத்தின் உதவியுடன்  எடுக்கப்பட்ட வீடியோவில் இது தெரியவந்தது. தவிர விமானத்தில் இடிபாடுகளில் ஒரு உடல் இருப்பதும் உறுதியானது. இது சலா அல்லது விமானியாக இருக்கும் என நம்பப்படுகிறது. 

கடலுக்கு அடியில் 222 அடி ஆழத்தில் உள்ள உடல்களை மீட்கும் பணிகள் விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்து சலா தந்தை ஹொராசியோ கூறுகையில்,‘‘ இதை என்னால் நம்ப முடியவில்லை. இது மோசமான கனவாக இருக்க வேண்டும்,’’ என்றார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?