Advertisement


விதர்பாவை சமாளிக்குமா சவுராஷ்டிரா: ரஞ்சி கோப்பை பைனலில் மோதல்

பிப்ரவரி 02, 2019 22:25
 Comments  
 


Ranji Trophy Cricket, Final, Vidarbha, Saurashtra, Pujara, Wasim Jaffer, Umesh Yadav
 

நாக்பூர்: நாக்பூரில் இன்று துவங்கவுள்ள ரஞ்சி கோப்பை பைனலில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இதில் ‘நடப்பு சாம்பியன்’ விதர்பா அணியை சமாளித்து சவுராஷ்டிரா அணி கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் நடத்தப்படும் உள்ளூர் முதல் தர ரஞ்சி கோப்பை தொடரின் 85வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாக்பூரில் இன்று துவங்கவுள்ள பைனலில், ‘நடப்பு சாம்பியன்’ விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

ஜாபர் நம்பிக்கை: ‘ஏ’ பிரிவு லீக் சுற்றில் விளையாடிய 8 போட்டியில், 3 வெற்றி, 5 ‘டிரா’ என, 29 புள்ளிகளுடன் விதர்பா அணி முதலிடம் பிடித்து ‘நாக்–அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் உத்தரகாண்ட் அணியை வென்ற விதர்பா, அரையிறுதியில் கேரளாவை தோற்கடித்து தொடர்ந்து 2வது முறையாக (2017–18, 2018–19) பைனலுக்குள் நுழைந்தது.

பேட்டிங்கில் அனுபவ வீரர் வாசிம் ஜாபர் நம்பிக்கை அளிக்கிறார். இம்முறை விளையாடிய 10 போட்டியில், 4 சதம், 2 அரைசதம் உட்பட 1003 ரன்கள் குவித்துள்ள இவர், மீண்டும் கைகொடுக்கலாம். கேப்டன் பைஸ் பசால் (726 ரன்), அக்சய் வாத்கர் (680) பலம் சேர்க்கின்றனர்.

உமேஷ் எதிர்பார்ப்பு: வேகப்பந்துவீச்சில் சீனியர் உமேஷ் யாதவ் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இம்முறை காலிறுதி, அரையிறுதியில் மட்டும் விளையாடிய இவர், 21 விக்கெட் சாய்த்துள்ளார். இவர், சக இந்திய வீரர் புஜாராவுக்கு நெருக்கடி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு, ஆதித்யா சர்வாதே (44 விக்கெட், 10 போட்டி), அக்சய் வாத்கர் (27 விக்கெட், 9 போட்டி), லலித் யாதவ் (19 விக்கெட், 6 போட்டி) ஒத்துழைப்பு தந்தால் சுலப வெற்றி பெறலாம்.

சாதிப்பாரா புஜாரா: ‘ஏ’ பிரிவு லீக் சுற்றில் 29 புள்ளிகளுடன் (3 வெற்றி, 5 தோல்வி) 2வது இடம் பிடித்த சவுராஷ்டிரா அணி, காலிறுதியில் உத்தர பிரதேசம், அரையிறுதியில் கர்நாடகாவை வீழ்த்தி, 3வது முறையாக (2012–13, 2015–16, 2018–19) பைனலுக்கு முன்னேறியது.

பேட்டிங்கில் புஜாரா கைகொடுப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை விளையாடிய 3 போட்டியில், ஒரு சதம், 2 அரைசதம் உட்பட 310 ரன்கள் குவித்துள்ள இவர், சக இந்திய வீரர் உமேஷ் யாதவ் பந்துவீச்சை எளிதாக சாளித்து ரன் சேர்க்கலாம். இவருக்கு, ஷெல்டன் ஜாக்சன் (838 ரன், 10 போட்டி), ஹார்விக் தேசாய் (763 ரன், 10 போட்டி), ஸ்னெல் படேல் (646 ரன், 10 போட்டி) ஒத்துழைப்பு தந்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.

பவுலிங்கில் தர்மேந்திராசின் ஜடேஜா (52 விக்கெட், 10 போட்டி), ஜெயதேவ் உனத்கட் (35) சாதிக்கலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?